தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் என பலரிடம் விசாரித்த சிபிஐ

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட குறித்து சிபிஐ இன்று பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட குறித்து சிபிஐ இன்று பலரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

Sterlite Shoot: CBI investigates in Tuticorin collector office

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அனைவரையும் விசாரித்து வருகிறது.

காலையில் சிபிஐ முதலில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்களிடம் விசாரித்தது அதை தொடர்ந்து வரிசையாக மூன்று மேற்பட்ட இடங்களில் சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தியது.

இன்று காலை தூத்துக்குடி வாட்டாச்சியரிடம் விசாரணை செய்தது. வாட்டாச்சியருக்கு துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்கும்படி அளவிற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று விசாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் வாட்டாச்சியரிடமும் விசாரிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நாத்தூரி அலுவலகத்திலும் விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு தொடர்பாக அங்கு இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் தூத்துக்குடியில் தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம், சிப்காட் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடந்த இடம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.

English summary
Sterlite Shoot: CBI investigates in Tuticorin collector office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X