திருச்செந்தூர் கடலில் அதென்ன உருவம்? பார்க்க கண்ணாடி மாதிரியே இருக்கு.. பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாமே
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. என்ன நடக்கிறது தூத்துக்குடி கடலில்?
தமிழகமெங்கும் தற்போது கோடை மழை கொட்டி வருகிறது.. இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது.. கடந்த வாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்கியிருந்தது..

அமாவாசை: அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடல் உள்வாங்குவதும், பிறகு இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றாகும்.. அந்தவகையில், கடந்த 7-ம்தேதி அமாவாசை நாளாகும்..
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் உள்வாங்கியது... இதற்கு பிறகு, மறுநாளும் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் நீர் உள் வாங்கியது... அதாவது, கடலுக்குள் இருந்த பாறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன.
பரபரப்பு: பிறகு நேரம் செல்ல செல்ல கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், எவ்வளவுதான் கடல் உள்வாங்கினாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கலங்குவதே கிடையாது.. வழக்கம்போலவே கடலில் குளித்து மகிழ்கிறார்கள். அதிலும் இப்போது கோடை விடுமுறை என்பதால், பக்தர்களின் வருகையும் அதிகரித்தபடியே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் திருச்செந்தூர் கடலில் பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.. கோவில் கடற்கரையில், கொஞ்ச நாட்களாகவே, ஏதோ உயிரினங்கள் கரை ஒதுங்குகிறதாம்.. அந்த உயிரினம் பார்ப்பதற்கு கண்ணாடி போலவே பளபளவென காணப்படுவதாக சொல்கிறார்கள்.. அருகில் சென்று பார்த்தபிறகுதான் தெரிந்தது, அவையெல்லாம் ஜெல்லி மீன்களாம்.
உரியும் தோல்: நாளுக்கு நாள் இந்த ஜெல்லி மீன்கள் கரையில் ஒதுங்கியவாறே உள்ளனவாம்.. இந்த மீன்கள் ஆபத்தானவை என்று சொல்கிறார்கள்.. விஷத்தன்மை உடையதாம்.. மனிதர்களின் உடலில் பட்டாலே, நெருப்பு பட்டதுபோல, தோல் அப்படியே உரிந்து வந்துவிடுமாம்.. இது தெரியாமல் சில பக்தர்கள் கடலில் குளித்திருக்கிறார்கள்.. அப்போது பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பிறகு, கடலோர பாதுகாப்பு குழுவினர், கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் இந்த ஜெல்லி மீன்களை பிடித்துக் கொண்டு போய் காட்டினார்கள்.. அதுகுறித்த விவரங்களையும் கேட்டார்கள்.
அதிக பாதிப்பு: பிறகு இது குறித்து, கடலோர பாதுகாப்பு குழுவினர் சொல்லும்போது, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடற்கரையில் இது போன்ற ஜெல்லி மீன்கள் காணப்படும்.. பார்ப்பதற்கு கண்ணாடி போல இருந்தாலும், இந்த மீன்கள் அதிக விஷத்தன்மை கொண்டவை. உடலில் பட்டதும் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றார்கள்.
ஜெல்லி மீன் என்று அழைககப்பட்டாலும், இவை மீன் வகையறா கிடையாது என்கிறார்கள்.. கடல் உயிரினங்களிலேயே அழகானதும் இந்த ஜெல்லி மீன்களதான், ஆட்பறிக்கக்கூடிய உயிரினமும் இந்த ஜெல்லி மீன்கள்தானாம். இதனை சிலர் சொறி மீன் என்றும் சொல்வார்கள்.
விழிப்புணர்வு: திருச்செந்தூரில் குவிந்துள்ள இந்த ஜெல்லி மீன்கள் குறித்து, கோவில் இணை ஆணையர் கார்த்திக் சொல்லும்போது, "கோவில் கடற்கரையில் ஜெல்லி வகை மீன்கள் அதிக அளவில் காணப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது.. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தெரிவிக்கப்படும்... அதற்கு பிறகு ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஜெல்லி வகை மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த, கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்... அதேபோல, கடற்கரையில் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்படும் என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications