100% தேர்ச்சிபெற்ற உதயநிதி.. முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கையை காப்பாற்றுவார்.. சேகர்பாபு நம்பிக்கை!
தூத்துக்குடி: தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்ற நாளில் இருந்து, அவரது செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுவிட்டார் என்றும், வரும் காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களை, நம்பிக்கையையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இன்று முதல் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

செல்போன் கொண்டு செல்ல தடை
இந்த விதியை மீறி செல்போன் கொண்டு செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா சேவைக்காக 4 சக்கர வாகன பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.

செல்போன் பாதுகாப்பு அறை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி பக்தர்களின் செல்போனை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு செல்போனிற்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். திருச்செந்தூர் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை கோவிலுக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படுகிறது.

2024ல் பணிகள் நிறைவு
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லாதபட்சத்தில் மற்ற பக்தர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும். பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருச்செந்தூர் கோவில் உள் பிரகாரத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பற்றி சேகர்பாபு
தொடர்ந்து அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விட்டார். வரும் காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களை, நம்பிக்கையையும் நிறைவேற்றுவார் என்று தெரிவித்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications