நாம் எல்லோரும் மானம் கெட்டவர்கள் தான்.. இப்படி வேடிக்கை பார்க்கிறோமே.. கடம்பூர் ராஜு ‘பரபர’ பேச்சு!
தூத்துக்குடி : இந்துக்களை 'விபச்சாரிகள்' என பேசிவிட்டு ஆ.ராசா தைரியமாக ரோட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் மானம் கெட்டவர்கள் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பி ஆ.ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது நீ இந்து என்றால் சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சவன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளைகள் என்று இந்து மதம் கூறுகிறது எனப் பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பாஜகவினர் மத்தியில் அனலைக் கிளப்பி இருக்கிறது. ஆ.ராசாவுக்கு எதிராக புகார், கையெழுத்து இயக்கம் என பாஜக, போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில் தான், ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக பரபரப்பைக் கிளப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

சர்ச்சையில் ஆ.ராசா
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசினார். "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சவன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன். சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளைகள் என இந்து மதம் கூறுகிறது. எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்." என்று பேசி இருந்தார் ஆ.ராசா.

இணைந்த பாஜக - அதிமுக
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுத்திய ஆ.ராசாவின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினையும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும், ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திராணி இருந்தா
மின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுகவுக்கு தெம்பு திராணி இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு 2024ல் தேர்தலை சந்திக்கட்டும். எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என விமர்சித்தார்.

மானங்கெட்டவர்கள்
மேலும் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்த கடம்பூர் ராஜூ, ஆ.ராசா இந்துக்களை விபச்சாரிகள், விபச்சாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பேசி விட்டு ரோட்டில், நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார். அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் கூட்டம் தான் நம் கூட்டம் உண்மையிலேயே நாம் மானம் கெட்டவர்கள் தான். இளிச்சவாயர்கள் தான்.

பாடம் புகட்டுவார்கள்
நம்மை இளிச்சவாயர்கள், ஏமாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட போகிறார்கள்." என கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications