வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 நிமிடங்கள்.. வெலவெலத்த ஆபீசர்கள்.. தரையில் உட்கார்ந்த கலெக்டர்.. திகைத்த திருப்பத்தூர்.. என்னாச்சு

கலெக்டர் காலில் விவசாயி விழுந்ததுமே, கலெக்டர் தரையில் அமர்ந்துவிட்டார்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட அலுவலகத்தில் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது சோஷியல் மீடியாவிலும் வெளியாகி, நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த குறை தீர்க்கும் நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.. அதேபோல, விவசாயிகளும் தங்கள் பிரச்சனைகளை மனுக்களாக எழுதி தருகின்றனர்..

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர்களும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.. சில சமயங்களில் இப்படி குறைதீர்வு கூட்டங்களில், பொதுமக்கள், அங்கிருக்கும் அதிகாரிகளுடன் தகராறுகள், வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் உண்டு.. மேலும் பல இடங்களில் கலெக்டர்களே, பொதுமக்களுக்கு நேரடியாக உதவி செய்து, நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நிகழ்வுகளும் உண்டு.

 அப்பாடா, நிம்மதி.. 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை-மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவிப்பு அப்பாடா, நிம்மதி.. 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை-மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவிப்பு

 348 மனுக்கள்

348 மனுக்கள்

அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வழக்கம்போல், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்துள்ளது.. அப்போது கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்... இந்த கூட்டத்தில் வேளாண், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 349 மனுக்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

கலெக்டர்

கலெக்டர்

மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அந்த மனுக்கள் தந்து, அவைகளின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்... அங்கு வந்திருந்தோரில், மாற்றுத்திறனாளிகளும் வந்திருந்தனர்.. ஆனால், அவர்களது இருப்பிடத்திற்கே சென்ற கலெக்டர், அவர்களின் கைகளில் இருந்த மனுக்களை தானே பெற்றுக்கொண்டார்... மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

 தரையில் உட்கார்ந்த கலெக்டர்

தரையில் உட்கார்ந்த கலெக்டர்

அந்த சமயத்தில்தான், இன்னொரு சம்பவம் நடந்தது.. அங்கு மனுகொடுக்க ஒரு விவசாயி வந்துள்ளார்.. நீண்ட நேரம் வரிசையில் மனுவுடன் காத்திருந்த அவர், கலெக்டரை பார்த்ததுமே திடீரென அவரது காலில் விழுந்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கலெக்டர், உடனே அவரை தூக்கிவிட்டு, தரையிலேயே அந்த விவசாயி முன்பு உட்கார்ந்து கொண்டார்.. அதற்கு பிறகுதான் அவரிடமிருந்த மனுவை வாங்கினார்.. பிறகு அந்த விவசாயியிடம், இப்படியெல்லாம் காலில் விழக்கூடாது, இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

 டென்ஷன் - அதிகாரிகள்

டென்ஷன் - அதிகாரிகள்

தரையில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் கலெக்டர் உட்கார்ந்து, விவசாயியிடம் பிரச்சனையை விசாரித்தார்... கலெக்டரே தரையில் உட்கார்ந்ததை பார்த்ததும், அவரை சுற்றி நின்றிருந்த அதிகாரிகள், என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தனர்.. தாங்களும் கீழே உட்காருவதா? நின்றுகொண்டே இருப்பதா? என்ற பதைபதைப்பிலேயே இருந்தனர்.. ஆனால், அதற்குள் கலெக்டர் எழுந்து விட்டார்.. அந்த 5 நிமிடமும் அதிகாரிகளுக்கு டென்ஷன் எகிறிவிட்டது.

 வாசல் வரை சென்ற கலெக்டர்

வாசல் வரை சென்ற கலெக்டர்

இப்படித்தான், சேலத்தில் ஒருமுறை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.. அங்கு வந்திருந்த ஒரு மாற்றுதிறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலியை, கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.. ஆனால், கலெக்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. கலெக்டரே, அந்த சிறுவனை தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்து, அவரே சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்து, கலெக்டர் ஆபீஸ் வாசல் வரை தள்ளிக் கொண்டே வந்து, வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார்... இந்த நிகழ்வு அப்போது பெரும் பரபரப்பாகவும், நெகிழ்வாகவும் பேசப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

English summary
heart touching incident in tirupattur collectorate and the collector sat on the ground, why கலெக்டர் காலில் விவசாயி விழுந்தமே, கலெக்டர் தரையில் அமர்ந்துவிட்டார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X