எனக்குனே வருவீங்களாய்யா? அன்று 'பவர்', அடுத்த நாள் 'மணி'.. துரைமுருகன் பங்கேற்ற விழாவில் கலகலப்பு!
வேலூர் : சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 'பவர் கட்' ஆகி மின் வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளே துரைமுருகன் பங்கேற்ற மற்றொரு விழாவில் வேறொரு ரூபத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்று அமைச்சர் துரைமுருகன் பேசிக் கொண்டிருந்தபோது, அருகே இருக்கும் கோயிலில் இருந்து மணி ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.
இதனால், கடுப்பான அமைச்சர் துரைமுருகன், எனக்குனே வருவீங்களாய்யா? எங்க போனாலும் டிஸ்டர்பன்ஸ் என கிண்டலாகப் பேசியுள்ளார். மீண்டும் தான் பேசும்போது இடையூறு ஏற்பட்டதால் அமைச்சர் டென்ஷன் ஆவாரோ என அதிகாரிகள் நகம் கடித்த நிலையில், சுமூகமாக அந்தப் பிரச்சனை முடிந்துள்ளது.

துரைமுருகன் மீட்டிங்கில் சம்பவம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் திடீரென தடைபட்டதால் மைக் வேலை செய்யவில்லை. பின்னர் மின் வாரிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியரும், எம்.எல்.ஏவும் தொடர்பு கொண்டு பேசினர்.

உடனடி டிரான்ஸ்ஃபர்
10 நிமிடங்களுக்கும் மேல் மின்சாரம் வராத நிலையில், அமைச்சர் துரைமுருகன் அப்செட்டாகி, மேடையில் பேசாமலயே கிளம்பினார். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரு மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆர்டர் போடவே, மேலும் 2 மின் வாரிய உதவி பொறியாளர்களும் டிரான்ஃஸ்பர் செய்யப்பட்டனர்.

டிஸ்டர்பன்ஸ்
இதற்கிடையே, இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே காட்பாடி தொகுதிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். பிறகு, அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இடையிடையே கோவில் மணி ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இதனால், அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது.

எனக்குனே நடக்குமா?
அருகே இருந்த கோவிலில் இருந்து தொடர்ந்து மணி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால், பேசுவது டிஸ்டர்ப் ஆனதால் கடுப்பான அமைச்சர் துரைமுருகன், எனக்குனே வருவீங்களாய்யா? நான் பேசுற இடத்தில் எல்லாம் இப்படியே நடக்குது என கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார். நிலைமையை உணர்ந்து மேடையில் இருந்தவர்கள் சிரித்துச் சமாளித்துள்ளனர்.
-
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
அமைச்சரை தெரியும்னு யாராவது வந்தால் வெளிய துரத்துங்க.. ஜூலை 1 முதல் மாற்றம்.. ராஜ்மோகன் அதிரடி -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை!












Click it and Unblock the Notifications