வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்கல்லாம் டாக்டர் ஆகி..வசூல்ராஜா பாணி ராகிங்! சிஎம்சியில் அத்துமீறிய சீனியர்கள்! பகீர் காட்சிகள்

Google Oneindia Tamil News

வேலூர் : புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்டதாக ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு விடுதி மாணவர்களை அரை நிர்வாணமாக விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளது.

கத்தி பேசும் தனம்.. பாய்ந்து வரும் மணிகண்டன்..உண்மையில் நடந்தது இதுதான்!குறும்படத்தில் உடைந்த குட்டுகத்தி பேசும் தனம்.. பாய்ந்து வரும் மணிகண்டன்..உண்மையில் நடந்தது இதுதான்!குறும்படத்தில் உடைந்த குட்டு

வேலூர் சிஎம்சி

வேலூர் சிஎம்சி

இது தொடர்பாக கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை சில மாணவர்கள் ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்துள்ளனர்.

ராக்கிங் வீடியோ

ராக்கிங் வீடியோ

இந்நிலையில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்கலை ராக்கிங் செய்யும் அதிர்ச்சி வீட்யோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மாணவர்கள் அரை நிர்வாணமாக கல்லூரி தங்கும் விடுதியை சுற்றி வருகின்றனர். அவர்கள் சீனியர் மாணவர்களால் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்து இருப்பதாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பலகலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து 7 சீனியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

மாணவர்கள் சஸ்பெண்ட்

மாணவர்கள் சஸ்பெண்ட்

இது தொடர்பாக பேசியுள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார்," ராகிங் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும். முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் ஏழு மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது" என கூறி இருக்கிறார்.

English summary
The administration has suspended seven senior students of the Vellore Christian Medical College for ragging after an incident of half-naked freshmen roaming around the hostel campus has created a huge controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X