வேலூருக்கு ஹேப்பி நியூஸ்.. குஷியில் துள்ளும் சென்னை, பெங்களூர்வாசிகள்.. விரைவில் வருகிறது அறிவிப்பு
வேலூர்: வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரம் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்து, கடந்த 2016ல், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஓடுதளம்: இந்த திட்டத்துக்காக, பொதுமக்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினலும் கட்டப்பட்டது.. தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் ரூம் போன்றவையும் அமைக்கப்பட்டன. ஆனால், அனைத்து பணிகளுமே அப்படியே முடங்கிவிட்டன.
கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.. வருடங்கள் உருண்டுவிட்டன.. 10 ஏக்கர் கடைசிவரை கிடைக்கவேயில்லை.. அதனால், இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு ஏர்போர்ட் பணிகளை முடிக்க முடிவானது.. விடுபட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெற்றன.. ஏர்போர்ட்டை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் வேலி போட்டுவிட்டால், அனைத்து பணிகளுமே முடிந்துவிடும் என்றார்கள். அதன்படியே அந்த பணியும் சமீபத்தில் முடிந்துவிட்டது.
ஓடுபாதைகள்: பிறகு, முதற்கட்ட சோதனைக்காக விமான போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமான விமானம், டெல்லியில் இருந்து வேலூருக்கு வந்து, ஓடுபாதையின் அருகே 5 முறை தாழ்வாக விமானத்தை இயக்கி சோதனைகளை நடத்தியது..
குறிப்பாக, விமானங்கள் இறங்கும் ஓடுதளப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல்வேளையில் சரியாக தெரிகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.. அதேபோல, கன்ட்ரோல் ரூமுக்கு, டவரில் இருந்து சிக்னல் கிடைக்கிறதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. இந்த நேரடி ஆய்வுகள் அனைத்துமே வெற்றிகரமாக முடிந்துள்ளதால், இதன் அடுத்தக்கட்டமாக ஓடுதள பாதையில் விமானத்தை இறக்கி சோதனை செய்ய போகிறார்களாம்.
வரப்பிரசாதம்: இதற்கு பிறகு, விமானம் இயக்குவதற்கான அனுமதி கிடைத்துவிட்டால், இன்னும் 2 மாதத்திற்குள்ளேயே வேலூர் விமான சேவை ஆரம்பமாகிவிடும் என்கிறார்கள். இந்த விமான சேவை துவங்கிவிட்டால், பெங்களூர் - சென்னை சென்று வருவதற்கான பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ, இந்த ஏர்போர்ட் மட்டும் வந்துவிட்டால், வேலூர் மாவட்டத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications