For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டோங்கோவில் வெடித்த எரிமலையால் அதிர்ந்த சென்னை.. 10 ஆயிரம் கிமீ தாண்டிய அதிர்வு

Google Oneindia Tamil News

டோங்கா : டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஒரு சிறிய தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு மக்கள் அந்த தீவில் வசித்து வரும் நிலையில் பெரிய மற்றும் சிறிய தீவுகளாக அந்த நாடு அமைந்துள்ளது.

'ஒன்இந்தியாதமிழ்' திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி: குவிந்த வீடியோக்கள்! 3 பேருக்கு முதல் பரிசு'ஒன்இந்தியாதமிழ்' திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி: குவிந்த வீடியோக்கள்! 3 பேருக்கு முதல் பரிசு

பசிபிக் பெருங்கடல் என்றாலே தீவுப் பகுதிகளிலும் கடலுக்கு அடியிலும் நிலப்பரப்புகளில் ஏராளமான எரிமலைகள் அமைந்திருப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருக்கும் அவை எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பி பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு

டோங்கா நாட்டிலும் ஏராளமான எரிமலைகள் கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி கூங்கோ டோங்கா என்ற தீவின் அருகே கடலுக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த எரிமலை கடும் சீற்றத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. கடலுக்குள் சுமார் 250 கிலோ மீட்டர் சுற்றளவில் 20 கிலோ மீட்டர் உயர அளவுக்கு எரிமலை வெடித்து சிதறிய சாட்டிலைட் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

கடலில் சுனாமி

கடலில் சுனாமி

எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியிலும் சுனாமி உருவானது. இதையடுத்து தீவு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுனாமி காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாத நிலையில் சூரியனையே மறைக்கும் அளவுக்கு கரும்புகை எழுந்ததும் மீண்டும் தீவில் எரிமலை வெடிப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், உலகின் மூலை முடுக்கில் உள்ள பல நாடுகளிலும் இந்த எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் அதிர்வு

சென்னையில் அதிர்வு


குறிப்பாக தூங்கு தீவில் இருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னையிலும் தொங்கு எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து எட்டரை மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் அமைக்கப்பட்டுள்ள வளிமண்டல அழுத்தமானியில் டோங்கா எரிமலை வெடிப்பின் அதிர்வுகள் உணரப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

வானிலை பாதிப்பு

வானிலை பாதிப்பு

கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக கடலில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்புகள் வரும் காலங்களில் ஏராளமான வானிலை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ஆனால் தற்போதைக்கு உடனடியான பாதிப்புகள் ஏதும் இருக்காது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

English summary
Vibrations were also felt in Chennai due to the eruption of the Tonga volcano. The tsunami was triggered by a volcanic eruption on the island of Tonga. According to the Chennai Meteorological Department, an atmospheric tremor has been reported in Chennai beyond 10 thousand kilometers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X