படிப்பில் ஆர்வமில்லை... எறும்புப் பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விடுதி மாணவிகள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் அரசு மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவிகள் நான்கு பேர் உணவில் எறும்புப் பொடியைக் கலந்து சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் படிப்பில் ஆர்வம் இல்லாததால், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. எறும்புப் பொடியை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவிகளை, விடுதி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை எனத் தெரிவித்திருப்பதால் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Theni 4 school students were attempted for suicide by eating poison.
Please Wait while comments are loading...