முதல்வர் ஸ்டாலின் சைக்கிளில் போறதே.. பாஜக மாநில தலைவர் அண்ணாமாலை கடும் விமர்சனம்
விழுப்புரம்: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு செய்த சாதனைகளில் முதலமைச்சர் இரண்டு லட்ச ரூபாய் சைக்கிளில் 2 கிலோ மீட்டர் செல்வதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது என தேர்தல் பரப்புரையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை பற்றி விமர்சனம் செய்தார்.
Recommended Video
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள சிறுவாடி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய அண்ணாமலை, " திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு செய்த சாதனைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு லட்ச ரூபாய் சைக்கிளில் 2 கிலோமீட்டர் செல்வதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

திமுக வாக்குறுதி
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏராளமான மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர், தற்போது அதனை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். நான்கு மாத காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று அவர்கள் எந்த ஒரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்த வில்லை.

தாமரைக்கு வாக்கு
திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றாமல் மக்களிடையே பொய்களைச் சொல்லி வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றி உள்ளனர். எனவே மக்கள் இதை உணர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை
முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை கேடிசி நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பள்ளிகள்திறப்பு என்பது காலத்தின் கட்டாயம் . பள்ளி திறப்பை பொறுத்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் .

அரசு பரிசீலிக்க வேண்டும்
தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் திறக்கும் போது, கோயிலுக்கு வரும் பெரும்பாலானோர் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கும் நிலையில் வெள்ளி சனி ஞாயிறு மூடியிருக்கும் கோயிலை திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் ஒரு சாராருக்கு மட்டும் அரசு ஆதரவாக செயல்பட கூடாது" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications