• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாக்! கேஎஃப்சி பர்கரை ஒரே கடி! உள்ளே பார்த்தால் ’உறை’! என்னங்க சார் இது! கடுப்பான வாடிக்கையாளர்!

Google Oneindia Tamil News

விழுப்புரம் : உலகப் புகழ் பெற்ற கேஎஃப்சி நிறுவனத்தின் விழுப்புரம் கிளையில் பர்கரை ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உணவகங்களில் சிக்கன் பீட்சா பர்கர் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிடுவதற்கு இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கேஎஃப்சி, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட கடைகளில் விற்கப்படும் ஸ்னாக்ஸ் வகைகள் இளைஞர்களை வெகுவாக கவர்கிறது.

அதே நேரத்தில் உணவகங்களில் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட மாணவி உயரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜொமாட்டோவை தொடர்ந்து இந்தி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!.. வைரலாகும் வீடியோ! #RejectKFC ஜொமாட்டோவை தொடர்ந்து இந்தி சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி!.. வைரலாகும் வீடியோ! #RejectKFC

ஷாக் சம்பவம்

ஷாக் சம்பவம்

அதற்குப் பிறகு உணவு பொருட்களின் பல்லி, கரப்பான் பூச்சி லேட்டஸ்டாக எலி தலை உள்ளிட்டவை இருப்பதோடு பேண்டேஜ் துண்டு என பல பொருட்களும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றன. வெளிநாடுகளில் தான் இது போன்ற வினோதங்கள் நடக்கும் என்ற நிலை மாறி தற்போது தமிழகத்திலேயே பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் விழுப்புரத்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பர்கரில் உறை

பர்கரில் உறை

காரணம் இந்த புகாரில் சிக்கி இருப்பது உலகப் புகழ் பெற்ற கேஎஃப்சி நிறுவனம். விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் அருகே திண்டிவனத்தை சேர்ந்த டேவிட் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கேஎஃப்சி பர்கர் கடைக்கு சென்று இருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் பர்கரை ஆர்டர் செய்த இளைஞர்களில் ஒருவர் அதனை சாப்பிட்ட போது பல்லில் ஏதோ நீல நிறத்தில் சிக்கி இருக்கிறது.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

அதனை எடுத்துப் பார்த்தபோது அந்த இளைஞர் கடும் அதிர்ச்சடைந்தார் காரணம் பர்கருக்குள் இருந்தது சமையல் செய்யும் போது மாஸ்டர்கள் கையில் அணிந்திருக்கும் கையுறையின் ஒரு பகுதி. இதையடுத்து அந்த இளைஞர்கள் உணவக நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் மன்னிப்பு கேட்டதோடு வேறு பர்கர் தருவதாக கூறியிருக்கிறார்கள்.

கோரிக்கை

கோரிக்கை

இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த இளைஞர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவு செய்த நிலையில் அது தற்போது வேகமாக பரவி வருகிறது மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரிவான விசாரணை நடத்தி உணவகங்களில் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

English summary
The shocking news that awaited a customer who ordered a burger at the Villupuram branch of the world famous KFC company is currently creating a heated debate on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X