டெல்லியில் போராடுபவர்கள் இடைத்தரகர்களா?.. குஷ்புவின் தவறான புரிதல்.. கமல் கடும் விமர்சனம்
செஞ்சி: டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள் என குஷ்பு கூறியது தவறான புரிதல் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரையில் பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பர் மோடி என்ற விவசாயிகள் சந்திப்பு கூட்டங்கள் நேற்றைய தினம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் நடிகையும் அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான குஷ்பு கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் குஷ்பு பேசுகையில், மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாக்கும். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும். ஒன்றரை லட்சம் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்ட பிறகுதான் மத்திய அரசு அந்த மசோதாவை கொண்டு வந்தது.

ஹரியானா
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எதிர்க்கட்சிகள், இடைத்தரகர்களின் தூண்டுதல்களின் பேரில்தான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். தற்போது விவசாயிகளைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்தால் இடைத்தரகர்களால் சம்பாதிக்க முடியாது.

இடைத்தரகர்கள்
விவசாயிகள் நேரடியாகப் பலனடைவர். இதனால் இடைத்தரகர்கள் போராட்டத்தை தூண்டி வருகிறார்கள் என குஷ்பு பேசியிருந்தார். இந்த நிலையில் செஞ்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், குஷ்புவின் கருத்துக்கு எதிர்கருத்தை முன் வைத்துள்ளார்.

குஷ்பு
கமலிடம் குஷ்பு குறித்த கேள்விகளை கேட்ட போது அவர் கூறுகையில், டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராடுகிறார்கள் விவசாயிகள் போராடவில்லை என குஷ்பு கூறியது தவறான புரிதல். அங்கு இருப்பவர்கள் அனைவருமே விவசாய உபகரணங்களுடன் போராடி வருகிறார்கள். அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல.

மண்ணின்
சேற்றில் கால் பதித்தவர்கள். இங்கிருந்து போய் அவர்களுக்காக ஆதரவு குரல் கொடுப்பவர்களும் விவசாயிகள், மண்ணின் மைந்தர்கள் என கமல் பேசினார். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கமல் அறிவித்த திட்டத்திற்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications