என்ன தவம் செய்தேனோ! பிறந்தநாளில் சொந்த ஊரில் தொண்டர்களுடன்.. கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்! காரணம்?
விழுப்புரம் : தனது 84 ஆவது பிறந்த நாளை சொந்த ஊரில் தொண்டர்கள் மற்றும் கிராம மக்களுடன் கொண்டாடிய பாமக நிறுவனர் ராமதாஸ் ர் தனது பெற்றோரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் விட்ட அழுத காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பாமக தலைவர் அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் இன்று (ஜுலை 25) தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தவர் ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் ஜூலை 25 1939ஆம் ஆண்டில் சஞ்சீவிராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் ராமதாஸ். பள்ளிப்படிப்பைச் கீழ்விசிறி ஊரிலுள்ள காந்திஜி ஆதாரப் பள்ளியில் பயின்ற இவர், தனது மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியில் நிறைவு செய்தார். படிப்பு முடிந்ததும், திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.

பாமக
பின்னர், ஏழை மக்களுக்குச் சேவை செய்யும்விதத்தில், சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய், 3 ரூபாய் என மிகக்குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தார். பின்னர் தான் வன்னியர் சமூகம் பின் தங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து பேராசிரியர் தீரன், ஏ.கே.நடராசன் உள்ளிட்ட வன்னியர் சமுதாயத் தலைவர்களுடன் சேர்ந்து `வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை 1980ஆம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தொடங்கினார்.

84வது பிறந்தநாள்
இந்த அமைப்பு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவாகியது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய சக்தியாக பாமக தற்போது வரை திகழ்கிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மருத்துவர் ராமதாஸ் நீண்ட தனது பிறந்தநாளை சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி கிராமத்தில் தொண்டர்களுடன் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு தனது பிறந்த கிராமத்தில் 84 அடி உயர பாமக கொடியை ஏற்றினார்.

கண்ணீர் விட்டு அழுதார்
அவருக்கு கிராம மக்கள் மேளதாளத்துடன் ராட்சத மாலை போட்டு வரவேற்றனர். என்ன தவம் செய்தேன் இம்மண்ணில் பிறக்க என கீழ்விசிறி கிராம மக்களிடம் கண்ணீர் மல்க கவிதை கூறினார். முன்னதாக தனது வீட்டிற்கு சென்று டாக்டர் ராமதாஸின் பெற்றோரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications