தரமான சம்பவம்.. கலர் மாறும் கள்ளக்குறிச்சி.. வருகிறது பிரம்மாண்ட தொழிற்பூங்கா.. என்னன்னு பாருங்க!
விழுப்புரம்: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் ஐடி பூங்கா, தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பல இடங்களில் தொடங்கி உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் பூங்கா; சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம்கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை: இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் ஐடி பூங்கா, தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பல இடங்களில் தொடங்கி உள்ளன.
அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் 190.42 ஏக்கரில் காலணி உற்பத்திக்காக புதிய தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் விண்ணப்பித்துள்ளது. தைவானின் Pou Chen 20,000+ பேருக்கு வேலைவாய்ப்புடன் இங்கு ஒரு ஆலைக்காக 2,302 கோடி முதலீடு செய்கிறது
தைவானின் காலணி தொழிற்சாலை துறையில் கொடி கட்டி பறக்கும் இந்த தற்போது கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
ராணிப்பேட்டை; இது ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது. அதன்படி ராணிபேட்டையில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உலக அளவில் இதனால் ராணிப்பேட்டை கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல காலனி நிறுவனமான ஹோங் பூ எனப்படும் நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய உள்ளது.
தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்து, அதன்பின் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் 130 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த நிறுவனம் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நாம் பயன்படுத்தும் பிரபல காலணிகளான நைக்கி, ரீபோக் போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த ஹோங் பூ நிறுவனம் வழியாகவே காலணிகளை தயாரிக்கின்றன. அந்த நிறுவனம்தான் தற்போது ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications