விழுப்புரம் தொகுதி: மீண்டும் வெல்ல போராடும் ரவிக்குமார்- சவால் விடும் அதிமுக, பாமக, நாம் தமிழர்!
விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். இந்த முறை விசிகவின் பானை சின்னத்தில் களம் காணும் ரவிக்குமாருக்கு அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் சவால்விடும் பலத்துடன் களத்தில் நிற்கின்றனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்: விழுப்புரம். வானூர் (தனி), திண்டிவனம் (தனி), திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, விக்கரவாண்டி.2009-ம் ஆண்டு முதல் விழுப்புரம் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் 2 முறை அதிமுக வென்றது; ஒரு முறை திமுக கூட்டணி வேட்பாளர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக ரவிக்குமார் வென்றார். முன்னர் திண்டிவனம் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் 7 முறை வென்ற தொகுதி இது. மதிமுக 2 முறை, திமுக 2 முறை வெற்றி பெற்றிருந்தன.

விழுப்புரம் லோக்சபா தொகுதி வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை- 14,94,259; இவர்களில் ஆண்கள்- 7,40,412; பெண்கள் 7,53,638; 3-ம் பாலினத்தவர் 209.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
மு. ஆனந்தன்(அதிமுக) 3,06,826
சுவாமிதுரை (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 3,04,029
கணபதி(தேமுதிக) 1,27,476
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
எஸ். ராஜேந்திரன்(அதிமுக) 4,82,704
முத்தையன் திமுக( 2,89,337)
உமா சங்கர்(தே.மு.தி.க) 2,09,663
ராணி (காங்கிரஸ்) 21,461
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ரவிக்குமார் (திமுக) 5,59,585
வடிவேல் இராவணன்(பாமக) 4,31,517
கணபதி(அமமுக) 58,019
பிரகலதா(நாம் தமிழர் கட்சி) 24,609
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள்
ரவிக்குமார் (விசிக)
பாக்யராஜ் (அதிமுக)
முரளி சங்கர் (பாமக)
களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)
விழுப்புரம் கள நில்வரம் என்ன?: விவசாயமே பிரதான தொழில். நெல்- கரும்பு சாகுபடிதான் அதிகம். கரும்பாலைகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் நாட்டின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை. திமுகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் விசிகவின் ரவிக்குமாருக்கு போனால் மீண்டும் 2-வது முறை வெல்வார். அதிமுகவின் வேட்பாளரான பாக்யராஜ், பாமகவின் முரளி சங்கர் ஆகியோரும் கடும் போட்டியை உருவாக்குவர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் களம் காண்கிறார். இதனால் இத்தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications