தமிழகத்தையே உலுக்கிய வீடியோ.. பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கியது ஏன்? தாய் அதிர்ச்சி வாக்குமூலம்
விழுப்புரம்: செஞ்சி மோட்டூர் கிராமத்தில் பெற்ற குழந்தை மீது கொடூர தாக்குதலை நடத்திய தாய் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தில் தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், இந்த கொடூர தாக்குதலின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் அடுத்த மணலப்பாடி மதுரா மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம் பள்ளியை சேர்ந்த துளசி என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

ஆந்திராவில் துளசி
இந்த நிலையில் வடிவழகன் மற்றும் அவரது மனைவி துளசிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள துளசி வீட்டில் அவரை விட்டு விட்டு வந்துள்ளார் கணவர் வடிவழகன். பின்னர்தான் தனது வீட்டில் இருந்த மனைவி செல்போனை எடுத்து வீடியோ, போட்டோக்களை பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கொடூர வீடியோ
கடந்த மாதம் 23ஆம் தேதி துளசி தனது இளைய மகன் பிரதீப்பை மிக கொடூரமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ அவரது செல்போனில் இருந்தது. அப்படியே உறைந்து போனார் வடிவழகன். இந்த நிலையில் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார் வடிவழகன். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

போலீசில் புகார்
இதையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் துளசி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சத்தியமங்கலம் ஆய்வாளர் தங்க குருநாதன் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் விரைந்து துளசியை கைது செய்தனர்.

கள்ளக்காதல்
விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இன்று காலை அழைத்து வந்து துளசியிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மீதுள்ள வெறுப்பை குழந்தை மீது காண்பித்து குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக துளசி தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலனை கைது செய்ய தீவிரம்
துளசி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த கள்ளக்காதலன் பிரேம்குமாரை பிடிக்க உதவி ஆய்வாளர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். கள்ளக்காதலன் மீது காதல் பெருகியதால், தனது கணவர் மீது துளசிக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது. அதை தனது குழந்தை மீது காட்டுமிராண்டித்தனமாக அடித்து தணித்துள்ளார் இந்த பெண்மணி.

வீடியோவை பரப்ப வேண்டாம்
இதனிடையே, குழந்தைகள் வன்முறை தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்று குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குழந்தையை தாக்கும் வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை பரப்பாதீர்கள் என அவர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். மாவட்ட மற்றும் மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. எனவே ஏதாவது பிரச்சினை என்றால், அங்கு முறையிடலாம் அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்கிறார்கள் குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications