பெட்ரூமில்.. ரூபாவின் "சிரிப்பு" சத்தம்.. அதிகாலையில் விக்கித்த கணவர்.. மெல்ல எட்டி பாத்தால்.. ஐய்யயோ
கள்ளக்காதல் காரணமாக இளைஞரை கல்லால் அடித்து கொன்ற கணவன் கைதாகி உள்ளார்
விருதுநகர்: விடிகாலை நேரத்தில் பெட்ரூமில் வந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு அதிர்ந்துபோனார் கணவர்.. இறுதியில் அந்த பயங்கரம் நடந்துவிட்டது..!!
சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் காகா காலனியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம்.. 25 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ரூபா.. 23 வயதாகிறது.. இவர்களுக்கு ஒன்றரை வயதில் திவ்யபாரதி என்ற மகள் இருக்கிறாள்.
கல்யாணம் ஆகி 3 வருடமாகிறது.. இந்த தம்பதி இருவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இருவருமே வேலைக்கு செல்கிறார்கள்.

ஃபேக்டரி
பாண்டி செல்வம், பூ வியாபாரமும், ரூபா எட்டக்காபட்டியில் பட்டாசு தொழிற்சாலையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.. ரூபா வேலை பார்த்து வரும் அதே ஃபேக்டரியில் டிரைவராக வேலை பார்ப்பவர் கருப்பசாமி.. 26 வயதாகிறது.. இவர்கள் 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக உருமாறி உள்ளது... பல நாட்களாகவே இவர்களுக்குள் பழக்கம் இருந்து வந்த நிலையில், இவர்களின் விஷயம், பாண்டிச்செல்வத்துக்கு தெரியாது.. இந்நிலையில், வேலை விஷயமாக, விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூருக்கு பாண்டிச்செல்வம் அடிக்கடி போக வேண்டியிருந்தது.

விடியும்டைம்
அப்படி ஆமத்தூருக்கு போய்விட்டால், வீட்டுக்கு திரும்பி வர, நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடுமாம்.. சிலசமயம் விடிந்துதான் வீட்டுக்கு வருவாராம் பாண்டிச்செல்வம்.. அதனால், இந்த சான்ஸை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்தார் ரூபா.. பாண்டி செல்வம் வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம், கருப்பசாமியை வீட்டிற்கு வரவழைத்தார். இரவு முழுவதும் சந்தோஷமாக இருந்துவிட்டு, விடியும் சமயத்தில் பாண்டிச்செல்வம் கிளம்பிவிடுவாராம்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் ரூபாவின் வீட்டுக்கு வந்துள்ளார் பாண்டிச்செல்வம்..

கண்ணே கூசுது
ஆனால், அன்றைய தினம், பாண்டிசெல்வத்துக்கு வேலை சீக்கிரமாக முடிந்துவிட்டதால், வீட்டுக்கு சீக்கிரமாக வந்துவிட்டார்.. வீட்டிற்குள் நுழைந்தால், அங்கு கண்ட காட்சியை பார்த்து விக்கித்து நின்றுவிட்டார்.. மனைவியின் துரோகத்தை பார்த்து கொந்தளித்தார்.. ஆனால், பாண்டிச்செல்வம் கண்ணால் பார்த்துவிட்டதை அந்த ஜோடி கவனிக்கவில்லை.. இதனால், அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த பாண்டிச்செல்வம், வீட்டை வெளிப்புறமாக வந்து இழுத்துபூட்டி விட்டார்... வழக்கம்போல் விடிகாலை நேரத்தில் வீட்டுக்கு கிளம்ப ரெடியானார் கருப்பசாமி.. அப்போதுதான், வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது பார்த்து அதிர்ந்து போனார்கள்..

வாசற்படியில்
அதனால், கதவை உடைக்கும் முயற்சியில் அந்த அந்த ஜோடி இறங்கியது.. அவர்களே வெளியே வரட்டும் என்று நினைத்த பாண்டிச்செல்வமும், கதவை திறக்கவேயில்லை.. எப்படி எப்படியோ முயற்சி செய்து, ஒருவழியாக கதவை உடைத்து கொண்டு வெளியே வந்தார் கருப்பசாமி.. அங்கே வாசற்படியில் பாண்டிச்செல்வம் நிற்பதை பார்த்ததுமே, காதல் ஜோடிக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனே அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, கருப்பசாமியின் தலையிலேயே மடார் என கட்டையால் அடித்து தாக்கினார் பாண்டி செல்வம்.. அப்போதும், தப்பி ஓட முயன்றார் கருப்பசாமி..

கதறிடுச்சே
பாண்டிச்செல்வம் ஒரு பெரிய கல்லை எடுத்துக் கொண்டு, பின்னாடியே ஓடிச்சென்று, அதே கல்லாலேயே அவரை அடித்தே கொன்றுவிட்டார்.. தகவலறிந்த சிவகாசி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி, போஸ்ட்மார்ட்டம் செய்ய விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. இறுதியில் ரூபாவையும், பாண்டிசெல்வத்தையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.. அந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, தாய் தகப்பன் இல்லால் கதறி கொண்டே நிற்கிறது.. ஒரு பெண் "பாதை" தவறினால், அந்த குடும்பமே சிக்கி சிதறுண்டு போய்விடும் என்பதற்கு ரூபாவும் ஒரு உதாரணம்..!!

பாதயாத்திரை
பாண்டி செல்வத்தின் அம்மா, வி.குமாரலிங்கபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்... அவர் தற்போது பாதயாத்திரை செல்கிறாராம்.. அவரை வழிஅனுப்பி வைப்பதற்காகவே, பாண்டி செல்வம் அவரது ஊருக்கு சென்றுள்ளார்... ஆனால், பாண்டி செல்வம் ஆமத்தூருக்குதான் வேலை விஷயமாக சென்றுள்ளதாக ரூபா நினைத்துள்ளார்.. எப்படியும் விடிகாலையில்தான வருவார் என்பதால்தான், கருப்பசாமியை வரவழைத்துள்ளார்.. ஆனால், அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு, பாண்டி செல்வம் நள்ளிரவு 2 மணிக்கே வீடு திரும்பிவிட்டாராம்.. வீட்டிற்குள் நடப்பதை பார்த்துவிட்டு, வெளிப்பற கதவையும் பூட்டி, விடியும்வரை வாசலிலேயே உட்கார்ந்திருந்துள்ளார்.. அதற்கு பிறகுதான், கற்கள், கட்டையை கொண்டு, கருப்பசாமியை அடித்தே கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications