கட்டுவிரியன் பாம்பு பஞ்சாப் நேஷனல் பேங்க்கில்? ATM மிஷினை பார்த்தால்? ஆடிப்போன விருதுநகர் சிவகாசி
விருதுநகர்: டிசம்பர் மாதம் குளிர் தமிழகமெங்கும் வாட்டி வதைத்து வரும் நிலையில், பாம்புகளின் நடமாட்டங்களும் அதிகரித்தபடி உள்ளன.. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சம்பவம், அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
விருதுநகர மாவட்டம் சிவகாசியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம் சென்டருக்கு, நேற்றையதினம் வழக்கம்போல் பணம் எடுக்க பொதுமக்கள் வந்துள்ளனர்..

ஏடிஎம் மிஷின்
அப்போது ஏடிஎம் மிஷின் அருகில் சென்றபோதுதான், அதற்குள் ஒரு பாம்பு பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... ஏடிஎம் மிஷின் பக்கத்தில் பாம்பு இருப்பது தெரியாமல் அருகில் சென்றபோதுதான், பாம்பு நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்..
பிறகு அந்த பகுதி மக்கள் அனைவருமே ஏடிஎம் வாசலில் கூடிவிட்டார்கள்.. இதனால் நேரம் பதற்றமான சூழ்நிலை அங்கு உருவானது. அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.. உடனடியாக இந்த தகவல் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
கரிய நிறமுள்ள கட்டுவிரியன்
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஏடிஎம் மையத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.. ஆனால், அந்த பாம்பை உடனே எடுக்க முடியவில்லை.. ஏடிஎம் மிஷினின் அடிபகுதிக்குள் பாம்பு சென்றுவிட்டது. இதனால் கம்பை வைத்து பாம்பை வெளியே எடுக்க முயன்றனர்..
ஏடிஎம் இயந்திரத்தின் கீழ் பகுதியில் இருந்த துளையில் பதுங்கியிருந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர்.. கம்பால் இழுக்க இழுக்க பாம்பு வெளிவந்தபடியே இருந்தது.. அப்போதுதான் கரிய நிறமுள்ள கட்டுவிரியன் என்பது தெரியவந்தது..
எந்தவிதமான உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படாத வகையில், அந்த பாம்பை அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டனர்... பாம்பை பிடித்த வனத்துறையினருக்கு வாடிக்கையாளர்கள் நன்றி கூறினார்கள், ஆனாலும் அதுவரை வாடிக்கையாளர்கள் இந்த சம்பவம் முடிந்த பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
பைக் சம்பவம்
நேற்றைய தினம் கோவையிலும் ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வேலைக்கு செல்ல தயாராக இருந்த ஒருவர், தன்னுடைய பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டை எடுக்க போனபோது, ஹெல்மெட்டின் உள்ளே பதுங்கியிருந்த ஒரு பாம்பு சீறி உள்ளது.. அதிர்ஷ்டவசமாக, அவர் ஹெல்மெட்டை தலைக்கு அணிவதற்கு முன்பே இதை கவனித்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
சிவகாசி ஏடிஎம் மையத்தில் நடந்த சம்பவமும், கோவையில் நடந்த ஹெல்மெட் சம்பவமும், பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன.
வெப்பத்தை தேடி அலையும் பாம்புகள்
வீட்டுக்கு வெளியே அல்லது திறந்த இடங்களில் வைத்திருக்கும் எந்த பொருளாக இருந்தாலும், அதை பயன்படுத்தும் முன் ஒரு முறை நன்றாக பார்த்து உறுதி செய்ய வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளிர் நேரங்களில் வெப்பம் கிடைக்கும் இடமாகும் மனித வீடுகள், காலியிடங்கள், களிமண், கப்புகள், ஹெல்மெட், செருப்பு போன்ற பொருட்கள் பாம்புகளுக்கு ஈர்க்கக்கூடிய இடமாக மாறும்... எனவே, வீட்டின் மேடைகள், சாளரம் அடிக்கடி மூடாத பகுதிகள், இரவு நேரங்களில் வெளியில் வைக்கப்பட்ட பொருட்கள் போன்ற இடங்களில் பாம்புகள் பதுங்கலாம்..
டிசம்பர் போன்ற குளிர் அதிகமாக இருக்கும் காலங்களில் உணவு கிடைக்கும் இடங்களுக்கும் பாம்புகள் செல்ல வாய்ப்பு அதிகமாகும்... எனவே, ஏடிஎம் மிஷின் அடிப்பகுதி, ஏசி மெஷின், ஃபிரிட்ஜின் அடிப்பகுதி, ஹெல்மெட், செருப்பு, குடைகள் போன்றவைகளில் கவனமாக வைக்க வேண்டும் என்றும் வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications