விஐபி தொகுதியாக விருதுநகர் விஸ்வரூபம்! ராதிகா, விஜயகாந்த் மகன் + காங்கிரஸ் மாணிக்கம் தாகூர் மோதல்!
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் தென் தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி தற்போது விஐபி தொகுதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத் குமார், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கக் கூடும் என்பதால் தேசிய அளவில் கவனம் பெறும் தொகுதியாகி இருக்கிறது விருதுநகர்.
நாடு விடுதலை அடைந்தது முதல் சிவகாசி லோக்சபா தொகுதி இருந்து வந்தது. தொகுதிகள் மறுசீரமைப்பின் போது சிவகாசி லோக்சபா தொகுதி நீக்கப்பட்டன. சிவகாசி லோக்சபா தொகுதியாக இருந்த போது சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஶ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், கொவில்பட்டி சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

தற்போது விருதுநகர் லோக்சபா தொகுதியாக மாற்றப்பட்டதையடுத்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக உருமாறி இருக்கிறது. விருதுநகர் தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் 2009-ம் ஆண்டு லோசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அத்தேர்தலில் மாணிக்கம் தாகூர் 3,07,187 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2,91,423 வாக்குகள், தேமுதிக பாண்டியராஜன் 1,25,229, பாஜக கார்த்திக் 17,336 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவின் ராதாகிருஷ்ணன் 406,694, மதிமுகவின் வைகோ 261,143, திமுகவின் ரத்தினவேலு 241,505, காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 38,482 வாக்குகளைப் பெற்றனர். அத்தேர்தலில் காங்கிரஸுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.
ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார். தேமுதிகவின் அழகர்சாமி 3,16,329, அமமுகவின் பரமசிவ ஐயப்பன் 1,07,615, மநீம முனியசாமி 57,129, நாம் தமிழர் கட்சியின் அருண்மொழித் தேவன் 53,040 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் மாணிக்கம் தாகூர் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். பாஜகவின் வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிடுகிறார். இதனால் விருதுநகர் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்பது எதிர்பார்ப்பு. விருதுநகர் தொகுதி தற்போது விஐபி தொகுதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications