77 நாடுகளில் தீவிரமாக பரவும் ஓமிக்ரான்... எங்கும் பாதிக்கலாம் - ஹூ இயக்குநர்

பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கலாம், அது இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் தற்போது 77 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கலாம், அது இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது என்றும் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறியுள்ளார்.

கடந்த 2ஆண்டுகாலமாக கொரோனாவின் பிடியில் உலக மக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். கொரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது அமெரிக்கா. கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு மக்கள் உயிரிழந்தனர். 2020 ஆம் ஆண்டில் டெல்டா வைரஸ் தீவிரமடைந்தது.

77 countries have now reported cases of Omicron WHO Report

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசியதால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. பல லட்சம் பேர் தினசரியும் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் ஓமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது.

உலகம் முழுவதும் பல கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், இன்றைய தினம் ஒரே நாளில் உலகம் முழுவதும் 6,04,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் மொத்தம் 27,17,04,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 24,42,01,183 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து 24,42,01,183 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 7,231 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம்
கொரோனாவால் 53,36,368 பேர் உலகம் முழுவதும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,04,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,11,3,2,730 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 1,559 பேர் உயிரிழந்துள்ளனர். 69,659 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 1,00,87,075 பேர் அமெரிக்கா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் சில மாகாணங்களில் ஓமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

பிரிட்டன் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 59,610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,09,32,545 பேர் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கினர். நாடு முழுவதும் 95,74,546 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 150 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 28,343 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 1,145 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே உலகம் முழுவதும் தற்போது 77 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உண்மை என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருக்கலாம், அது இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது என்றும் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதல்முறையாக ஓமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Recommended Video

    ஓமைக்ரான் தாக்கம் எதிரொலி: வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

    ஓமிக்ரான் அறிகுறிகள் பாதிப்புகள் லேசானது என்று மக்கள் சாதாரணமாக நினைக்கிறார்கள் அதை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம். நிச்சயமாக, இந்த வைரஸை எதில் குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதை நாங்கள் இப்போது கற்றுக்கொண்டோம். ஓமிக்ரான் குறைவான கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+