"புயலில் சிக்கி குலுங்கிய விமானம்".. மரண ஓலமிட்ட பயணிகள்.. வானில் திக்.. திக்.. நிமிடங்கள்!
வாஷிங்டன்: சிலி தலைநர் சாண்டிகோவில் இருந்து பராகுவே நாட்டுக்கு 48 பயணிகளுடன் பறந்த விமானம் புயலில் சிக்கி பலத்த சேதமடைந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
கனமழை, பலத்த புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது பொதுவாக விமானங்கள் இயக்கப்படாது.
கனமழை பெய்தால் கூட விமானம் தரையிறங்காமல் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம்.

48 பயணிகளுடன்
அடிக்கடி காற்றின் சீரற்ற தன்மையால் டர்பியுலன்ஸ் ஏற்பட்டு விமானம் குலுங்கியதாகவும் இதனால் பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூட அவ்வப்போது சில நிகழ்வுகள் நடக்கின்றன. சிலி நாட்டில் இருந்து பராகுவே நாட்டிற்கு சென்ற ஒரு விமானம் புயலில் சிக்கி பலத்த சேதம் அடைந்து சம்பவம் நடைபெற்றுள்ளது. சிலி நாட்டின் சாண்டிகோ நகரில் இருந்து பராகுவே நாட்டின் அசன்சியன் நகருக்கு LATAM A320- என்ற விமானம் 48 பயணிகளுடன் கடந்த 26 ஆம் தேதி சென்று கொண்டிருந்தது.

மீண்டும் புறப்பட்ட விமானம்
இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது கடும் புயல் வீசியது. இதனால், எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து ஃபோஸ் டி இகுவாகு (Foz de Iguacu) நகரத்திற்கு விமானம் அவசரமாக திருப்பி விடப்பட்டது. விமானம் ஃபோஸ் டி இகுவாகு விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் நிலைமை சீரானதாக கருதி விமானம் மீண்டும் அசன்சியன் நகருக்கு புறப்பட்டு சென்றது.

எமர்ஜென்சி லேண்டிங்
ஆனால் தலைவிதி என்று சொல்வார்களே அதேபோல விமானம் இந்த முறையும் புயலில் சிக்க நேரிட்டது. இதனால், விமானத்தில் டர்பியுலன்ஸ் ஏற்பட்டு பயங்கரமாக குலுங்கியது. பயணிகள் பீதியில் உறைந்து போகினர். விமானத்தின் முன்பக்க கண்ணாடியும் சேதம் அடைந்தது. இதனால் இந்த பயணம் பயணிகளுக்கு திக் திக் என ஒவ்வொரு நொடியும் அச்சமான சூழல் நிலவியது.

மரண ஓலமிட்ட பயணிகள்
நடு வானில் பறந்த போது விமானம் குலுங்கியதால் உள்ளே இருந்த பயணிகள் அலறி துடித்தனர். மேலும் விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகளின் உடைமைகள் அங்கும் இங்குமாக விழுந்தன. இதனால் உயிர் பயத்தில் பயணிகள் மரண ஓலமிட்டனர். விமானம் நல்லபடியாக தரையிறங்கி விடுமா.. நாம் எல்லோரும் உயிர் பிழைப்போமா என்ற மரண பீதியில் ஒவ்வொரு பயணிகளும் நேரத்தை கடந்தனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி பார்ப்பவர்களை அச்சமடைய செய்கிறது.

பயணிகளுக்கு பாதிப்பில்லை
இதையடுத்து சுமார் 5 மணி நேரம் சுற்றிய விமானம் அசன்சியன் விமானத்தில் பிறகு எமர்ஜென்சி லேண்டிங் செய்தது. டர்பியுலன்சில் சிக்கி விமானம் கணிசமான சேதம் அடைந்தாலும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பத்திரமாக பயணிகள் தரையிறங்கினர். விமான நிறுவனமும் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளது. கடுமையான தட்பவெப்ப சூழல் காரணமாக விமானம் பாதிக்கப்பட்டதாகவும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. விமானத்தின் விண்ட்ஷீல்டு சேதம் அடைந்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications