வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 6 மாதங்களில்... கொரோனா அதிகமாக இருக்கும்... எச்சரிக்கும் பில்கேட்ஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    6 மாதம்.. ரொம்ப கவனமாக இருக்கணும்: பில்கேட்ஸ் தரும் கொரோனா அதிர்ச்சி!

    உலகம் முழுவதும் தான் எதிர்பார்த்ததை விட பொருளாதார தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை காரணமாக கொரோனா தொற்றுக்களை குறைக்க முடியும் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

     Bill Gates says next six months could be worst of pandemic

    மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 2015-ம் ஆண்டே கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். உலகம் முழுவதும் மிகப்பெரிய வைரஸ் ஆட்டிப்படைக்கும் என கூறியிருந்தார். அவரின் மைக்ரோசாப் நிறுவனம் கொரோனா மருந்து விநியோக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் அடுத்த நான்கு அல்லது ஆறு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என பில்கேட்ஸ் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், இறப்புகள் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா நிலைமை மிக மோசமாக இருக்கும். கொரோனாவை விரட்டியடிக்க வேண்டுமானால் மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பாதிப்புகள், உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

    Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை! Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை!

    முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் தடுப்பூசி குறித்த மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக கூறியுள்ளதால் நானும் கொரோனா தடுப்பூசியை பொது வெளியில் எடுத்து கொள்வேன். அமெரிக்காவிலும், உலகெங்கிலும் பொருளாதார தாக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த கணிப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. எங்களது அறக்கட்டளை கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கி வருகிறது.

    உலகப் பொருளாதாரம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளை குறைக்க விரும்புகிறோம் என்று பில்கேட்ஸ் கூறினார்.உலக நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. அங்கு தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமாக பாதிப்பு இருப்பதும், உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Microsoft founder Bill Gates has warned that the Corona vulnerability will be greatest in the United States for the next 4 to 6 months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X