அமெரிக்காவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 2,51,910 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் 9,49,625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா அலை மீண்டும் தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 9,49,625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் புதிய உச்சம் தொட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 2,51,910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டு காலமாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். தடுப்பூசி செலுத்தினாலும் மாறி மாறி உருமாறிய வைரஸ் தனது வீரியத்தைக் காட்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 9,49,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,84,72,776 பேராக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 533,991 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,91,36,274 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 6,442 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 54,00,159 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 2,39,36,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது. அங்கு கொரோனாவால் 2,51,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
54,282 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 1,095 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,34,391 பேராக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,09,76,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பிரிட்டனில் ஒரே நாளில் 1,19,789 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரத்தில்
38,889 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 16,58,173 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 147 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் ஒரே நாளில் 25,667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 1,002 பேர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 91,608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஜெர்மனி நாடுகளிலும் கொரோனா அலை தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications