வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா...37 கோடி பேர் பாதிப்பு - 56.66 பேர் மரணம்

உலகம் முழுவதும் ஒரே நாளில் 32,76,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 37,00,43,261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 32,76,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,00,43,261 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9,733 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 22,08,287 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் உலகம் முழுவதும் 29,22,73,543 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 56,66,789 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து உலகம் மக்கள் பல கோடி பேர் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளனர். பல கோடி பேர் தடுப்பூசி செலுத்தியும் கொரோனா கட்டுப்படாமல் உள்ளது. ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் உலகெங்கும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?.. பொன்.ராதாகிருஷ்ணன் பதில் இதுதான்! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா?.. பொன்.ராதாகிருஷ்ணன் பதில் இதுதான்!

 3,99,598 பேர் பாதிப்பு

3,99,598 பேர் பாதிப்பு

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 3,99,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,180 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 2,32,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 862 பேர் மரணமடைந்துள்ளனர். அதே போல பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 257,239 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 779 பேர் பிரேசில் நாளில் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

பிரான்ஸ் நாட்டில் 3,53,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டில் 1,43,898 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 1,18,922 பேரும், ஜெர்மனி நாட்டில் 1,89,464 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

தீவிரமாக பரவும் ஒமிக்ரான்

தீவிரமாக பரவும் ஒமிக்ரான்

ஓமிக்ரான் கொரோனா கூட வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் மத்தியில் தான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓமிக்ரான் கொரோனாவால் உலகெங்கும் வைரஸ் பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. ஏற்கனவே, ஓமிக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் உச்சம் தொட்டு மீண்டும், குறையத் தொடங்கிவிட்டது.

மின்னல் வேக பரவல்

மின்னல் வேக பரவல்

அடுத்துக் கண்டறியப்படும் உருமாறிய எவ்வளவு வேகமாகப் பரவும் எந்தளவு தீவிரமாக இருக்கும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால், ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் ஓமிக்ரான் முந்தைய கொரோனா வகைகளைப் போலத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Guidelines for adult Covid-19 patients having MILD symptoms
    நிறைய வைரஸ்கள்

    நிறைய வைரஸ்கள்

    கொரோனா என்பது கடைசி வைரஸ் இல்லை.. இன்னும் பல வைரஸ்கள் உலகம் முழுக்க உள்ளது. பல புதிய பெருந்தொற்றுகள் உலகை தாக்கலாம். மக்கள் இப்போதே கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை அரசுகள் முறையாக உருவாக்க வேண்டும் என்று கடந்த வருடமே உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

    English summary
    The third wave of the corona intensified. Worldwide, 32,76,816 people were affected by corona in a single day. This brings the total number of corona victims to 37,00,43,261. 9,733 people died in a single day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X