வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் எர்த்! 2 சூரியன்கள், பயங்கர ஆழமான கடல்களை கொண்ட பூமியின் பெரியண்ணன்.! வியந்துபோன விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியில் இருந்து பல பில்லியன் கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சூப்பர் எர்த்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த பேரண்டத்தில் உயிர்கள் வாழத் தகுதியான இடமாகப் பூமி மட்டுமே இருக்கிறதா, வேறு கோள்கள் இருக்கிறதா என்ற ஆய்வாளர்களின் தேடல் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அந்த தேடலில், ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்ததுதான் இந்த TOI - 1452b என்ற பெயரிடப்பட்ட புதிய கோள். பூமியில் இருந்து 100 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த புதிய கோள், பூமியைப் போன்று தோற்றமளிப்பது இதில் கவனிக்கத்தக்கது.

ஸ்பீட் & ஸ்லோ! மாறி மாறி சுழலும் பூமி! அப்போதெல்லாம் ஒரு நாள் 19 மணி நேரம்தானாம்! வியந்த ஆய்வாளர்கள்ஸ்பீட் & ஸ்லோ! மாறி மாறி சுழலும் பூமி! அப்போதெல்லாம் ஒரு நாள் 19 மணி நேரம்தானாம்! வியந்த ஆய்வாளர்கள்

 5 மடங்கு பெரியது

5 மடங்கு பெரியது

ஆனால், அது பூமியைப் போல இல்லாமல், இந்த கோளுக்கு இரண்டு சூரியன்கள் இருக்கின்றன. மேலும், இந்த கோள், பூமியை விட 70 விழுக்காடு பெரியது. மேலும், அதாவது 5 பூமிகளுக்குச் சமம். இந்த கோளின் அடர்த்தி அதிகமாக இருக்கும் ஆய்வாளர்கள் கூறுவதால், அங்கிருக்கும் கடலின் ஆழம் பூமியை விட அதிகம் இருக்கலாம் என்ற கூறப்படுகிறது.

நீர் பகுதிகள்

நீர் பகுதிகள்


மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, பல தகவல்களையும் தெரிவித்து வருகின்றனர். அதாவது, பூமியின் பெரியண்ணனாகக் கருதப்படும் இந்த புதிய கோளின் எடையில் 30 சதவீதம், அங்கிருக்கும் பெருங்கடல்தான். நம் பூமியின் எடையில், இங்கிருக்கும் 70 விழுக்காடு நீர்நிலை பகுதிகள் வெறும் 1 விழுக்காடுதான் பங்களிக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.

குறைவான வெப்பம்

குறைவான வெப்பம்

இந்த பூமி தனது சூரியன்களை 11 நாள்களில் சுற்றிவருகிறது. அதாவது இங்கு ஒரு ஆண்டு என்பது வெறும் 11 நாள்கள்தான். நம்முடைய சூரியனை விடச் சிறிய நட்சத்திரத்தைத்தான் இந்த புதிய கோள் சுற்றி வருகிறது. இந்த சிறிய நட்சத்திரம், நமது சூரியனை விட வெப்பம் குறைவானது என்று நாசா தெரிவித்துள்ளது.

ஒளி

ஒளி

இந்த கோள், தனது ஒளியை அந்த நட்சத்திரத்தில் இருந்துதான் பெறுகிறது. அதன் அளவு என்பது, நமது சூரியனிடம் இருந்து 'வெள்ளி' கோள் பெறும் ஒளி அளவிற்குச் சமம். இதனால், அங்கு நீர் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய கோளை சுற்றியுள்ள நட்சத்திரங்கள் அனைத்தும், மிகத் தொலைவாக இருக்கிறது. குறிப்பாக, அனைத்து நட்சத்திரத்தையும் இந்த கோள் சுற்றி முடிக்க 1,400 ஆண்டுகள் தேவைப்படும்.

பாறைகள்

பாறைகள்

இங்கு நீர் இருப்பதைக் கண்டுபிடிக்க இன்னும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த கோளில் பெரிய பெரிய பாறைகள் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவிக்கிறது. மேலும், அங்கு வளிமண்டலம் குறைவாக இருக்கலாம் அல்லது வளிமண்டலமே இருக்காது என்றும் நாசா கூறுகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்கள் இந்த வளிமண்டலத்தில் நிறைந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

தூரம்

தூரம்

இந்த புதிய கோளை, டெஸ் (TESS) டெலஸ்கோப் மற்றும் வேறு சில டெலஸ்கோப்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், தற்போது விண்வெளி ஆராய்ச்சித்துறையில் பெரும் பாய்ச்சலைச் செலுத்திய ஜேம்ஸ் வெஃப் ஸ்பேஸ் டெல்ஸ்கோப் வருங்காலத்தில் இந்த கோளின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படலாம். இந்த TOI-1452b கோள் என்பது 100 ஒளியாண்டுகள் தூரத்தில்தான் இருக்கிறது, எனவே பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இது ஏதுவாக இருக்கும். இதனால், வருங்காலத்தில் பூமியின் பெரியண்ணன் குறித்து நமக்குப் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Astronomers have found an Earth-like planet that is bigger, could have deeper oceans and two suns: பூமியைப் போலவே இருக்கும் சூப்பர் எர்த் பெரிய அதிசயம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X