என்னது தோசைக்கு ‘நேக்கட் கிரீப்’ என பெயரா? அமெரிக்காவில் இப்படி மாத்திட்டாங்களே! வடைக்கு வந்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு உணவு விடுதியில் தோசைக்கு 'நேக்கட் கிரீப்' என்று பெயர் வைத்துள்ளனர். இது குறித்த மெனு கார்டு டுவிட்டரில் பரவிவரும் நிலையில், ஏன் இந்த பெயரை மாற்றுகிறீர்கள் என நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது தோசை. குறிப்பாக தமிழகத்திற்கு வரும் வட இந்திய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஏன் வெளிநாட்டு தலைவர்கள் கூட தோசையை விரும்பி சாப்பிடுவதோடு அதன் ருசியை பாராட்டிச் செல்வதையும் நாம் கேள்விபட்டு இருக்கிறோம். அதேபோல், நம்ம ஊர் டீக்கடையில் இருந்து நட்சத்திர விடுதி வரை என எங்கும் கிடைக்கும் வடையும் இதற்கு சற்றும் சளைத்தது இல்லை.

தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை ஆகியவை உலகம் முழுவதும் கிடைக்கும். குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தோசை, வடை போன்ற உணவு பொருட்கள் தாரளமாக கிடைக்கக் கூடிய பல உணவு விடுதிகளை பார்க்கலாம்.

 அமெரிக்காவில் இட்லி, தோசை

அமெரிக்காவில் இட்லி, தோசை

அந்த வகையில், அமெரிக்காவிலும் தோசை, சாம்பார் வடை போன்றவை விற்பனை செய்யப்படும் பல உணவு விடுதிகள் உள்ளன. நமது ஊரில் பிரபலமாக உள்ள உணவகங்கள் கூட அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கள் கிளைகளை அமைத்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றில் தோசை, இட்லி சாம்பார் வடை ஆகியவற்றின் பெயரை மாற்றி வைத்திருப்பதோடு, அதன் விலையும் பல மடங்கு அதிகமாக இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 ஒரு தோசை 1,318 ரூபாய்

ஒரு தோசை 1,318 ரூபாய்

அமெரிக்காவின் சியாட்டிலை சேர்ந்த இந்தியன் க்ரீப் கோ என்ற உணவு விடுதி தனது மெனு கார்டில், நம்ம ஊர் சாம்பார் வடைக்கு வைத்திருக்கும் பெயர் தான், "டங்க்ட் டோனட் டிலைட்' . பெயர் மட்டும் அல்ல அதன் விலையை கேட்டாலும் நமக்கு தலைசுற்றும். அமெரிக்க டாலர் மதிப்பில் 16.49 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.1,318.83-ஆகும்.

 டுவிட்டரில் பரவும் மெனு கார்டு

டுவிட்டரில் பரவும் மெனு கார்டு

அதேபோல், சாதாரண தோசைக்கு 'நேக்கட் கிரீப்' மசால் தோசைக்கு 'ஸ்மேஸ்ட் பொட்டட்டோ கிரீப்' என்ற பெயருடன் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. தோசையின் விலை நம்ம ஊர் மதிப்பில் ரூபாய் 1,400-ஐ தாண்டும். அந்த உணவு விடுதியின் மெனு கார்டை வாடிக்கையாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த டுவிட்டை பார்த்து பலர் லைக் மற்றும் ரீடுவிட் செய்ய இது குறித்த விவாவதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளன.

 தோசை பெயரை ஏன் மாற்ற வேண்டும்

தோசை பெயரை ஏன் மாற்ற வேண்டும்

அமெரிக்காவின் பிரபல உணவாக அறியப்படும் பீட்சாவை உலகம் முழுக்க நாம் பீட்சா என்றே குறிப்பிடும் போது தோசை பெயரை மாற்ற வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் ஆதங்கங்கத்துடன் தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், அமெரிக்கர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள் இதில் என்ன தவறு உள்ளது எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இவ்வாறாக இது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+