பேசாம வேலைய விட்டுருலாம்னு நினைக்கிறேன்.. எலான் மஸ்க் ட்வீட்!.. ஐடியா கொடுக்கும் ஃபாலோயர்ஸ்!
வாஷிங்டன்: உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் தனது வேலையை விட போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பார்.
அவ்வப்போது ட்விட்டரில் தன்னை பின்தொடர்பாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். டெக்னாலஜி குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். இவரது ஒவ்வொரு ட்வீட்டும் ஒவ்வொரு செய்தியாக மாறும்.

ட்விட்டர் சிஇஓ
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரின் சிஇஓவாக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது கூகுள், மைக்ரோசாப்ட், அடோப், ஐபிஎம் வரிசையில் ட்விட்டரின் சிஇஓவாக இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐரீஷ் தொழில்நுட்ப கலைஞர் போட்ட ட்வீட்டுக்கு எலான் மஸ்க் பதில் கொடுத்திருந்தார்.

இந்தியர்களின் திறமைகள்
இதற்கு இந்தியர்களின் திறமையை அமெரிக்கா சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறது என ட்வீட் போட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்க்க உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்ததாக கருத்துகள் பகிரப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது ஹேர்கட் ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டது. இந்த ஹேர்கட்டை அவரே செய்து கொண்டார்.

இன்ஃப்ளூயன்சர்
தற்போது இன்னொரு ட்வீட்டை பதிவு செய்து உலகத்தையே தன் பக்கம் திருப்பியுள்ளார். அந்த ட்வீட்டில் நான் எனது வேலைகளை எல்லாம் விட்டுவிடலாம் என கருதுகிறேன். இன்ஃப்ளூயன்சராக (சமூகவலைதளங்களில் மற்றவர்களுக்கு ஐடியாக்களை கொடுப்பது, சம்பாதிப்பது) மாற போகிறேன். இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஜிட்டல் உலகம்
இவரது ட்வீட்டிற்கு ஒருவர் யூடியூபில் எப்படி சம்பாதிப்பது என்ற டிப்ஸை வழங்கியுள்ளார். அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், தற்போதைய டிஜிட்டல் உலகில் இன்ஃப்ளூயன்சரை விட வேறு எதுவும் பிரபலமானது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications