வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பனியால் வந்த சோதனை! சர்வீஸ் சென்ற காருக்கு நேர்ந்த கதியை பாருங்க!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வட அமெரிக்காவில் வீசிய கடும் பனிப்புயல் அங்குள்ள மக்களை நடுநடுங்க வைத்தது. பாம் புயல் என்று அழைக்கப்பட்ட இந்த பனிப்புயல் ஒரு தலைமுறை காணாத அளவுக்கு அதீத குளிரைக் கொண்டு வந்தது. வெப்பநிலை மைனஸ் 10 டிகிரிக்கும் கீழ் சென்றதால் உறைபனிகளால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருந்தது. இந்த நிலையில், புயலினால் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் ஒவ்வொன்றாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் கடந்தவாரங்களில் கடுமையான பனிப்புயல் வீசியது. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கிளம்பிய இந்த பனிப்புயல் பாம் புயல் என்று அழைக்கப்பட்டது.

சுமார் 65 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் இந்த தலைமுறை காணாத பனியால் ஏற்பட்டது. அமெரிக்காவில் வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டியுள்ள காலங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்றாலும் நடப்பு ஆண்டில் மிக அதிகமாக இருந்தது.

ஒன்றிணையும் கம்யூனிச சக்திகள்.. ஆயுதப்படையில் ரஷ்யாவுடன் கைக்கோர்ப்பு.. நோட்டமிடும் அமெரிக்கா! ஒன்றிணையும் கம்யூனிச சக்திகள்.. ஆயுதப்படையில் ரஷ்யாவுடன் கைக்கோர்ப்பு.. நோட்டமிடும் அமெரிக்கா!

வட அமெரிக்காவில் கடும் பனி

வட அமெரிக்காவில் கடும் பனி

வட அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் சில பகுதிகளில் எங்கு திரும்பினாலும் வெள்ளை பனிப்படலங்களாக உறைந்து காணப்பட்டன. உலக பிரசித்தி பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு பகுதி கூட உறைந்து போனது. அதேபோல மான் ஒன்று உடல் முழுவதும் உறைந்த பனிக்கட்டிகளுடன் அல்லோலப்பபட்ட காட்சி கூட கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வட அமெரிக்காவில் நிலவும் பனியின் தாக்கத்தை காட்டுவதாக அமைந்து இருந்தது.

பனிக்குகைக்குள் சிக்கியது போல

பனிக்குகைக்குள் சிக்கியது போல

அதேபோல் பல லட்சம் வீடுகள் இருளில் கூட மூழ்கியிருந்தன. தற்போது அந்த நிலைமை மீறி பனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அமெரிக்காவின் பனியினால் ஏற்பட்ட தீவிர தாக்கத்தை காட்டும் வகையில் அவ்வப்போது சில பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ஆஸ்டின் மாகாணத்தில் வாட்டர் வாஷிற்காக நிறுத்தப்பட்ட கார் ஒன்று உறைபனியில் உறைந்து பனிக்குகைக்குள் சிக்கியது போல காட்சியளிக்கும் இமேஜ் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 இணையத்தில் பரவும் வீடியோ

இணையத்தில் பரவும் வீடியோ

மைனஸ் 10 முதல் 12 டிகிரிகளாக இருந்த சமயத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஊற்றி கழுவுவதற்காக நிறுத்தப்பட்டு இருந்த கார் ஏதோ பனிக்குகையில் சிக்கி தவிப்பது போல காட்சி அளிக்கிறது. இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கும் இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மேலே இருந்து விழும் நீர் கூட அப்படியே உறைந்து பனிக்கட்டிகளாக நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

பனிப்புயல் மற்றும் மழையால்

பனிப்புயல் மற்றும் மழையால்

அமெரிக்காவில் வீசிய பனிப்புயலால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த கடுமையான கால சூழலில் இருந்து மீள்வதற்குள் தற்போது அங்கு கனமழை பெய்ய தொடங்கியது. பனிப்புயல் மற்றும் மழையால் ஏராளமான வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தற்போது புயல் தாக்கம் தணிந்து இருப்பதால் நீர் நிலைகள் மற்றும் சாலை ஓரங்களில் சேதம் அடைந்து கிடக்கும் வாகனங்களை உரிமையாளர்கள் மீட்டு வருகின்றனர்.

35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு

35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு

வட அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதாவது ஒரு தலைமுறை காணாத வகையில் வீசும் பனிப்புயலால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். செவ்வாய் கிரகத்தில் காணப்படும் குளிர்ச்சிக்கு நிகர் என்று சொல்லும் அளவுக்கு மைனஸ் 40 டிகிரி வரை வெப்ப நிலை இருப்பதால் அங்கு குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல மாகாணங்களும் தவித்து வருகின்றன. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரி உறைந்தது. இந்த உறைந்த ஏரியில் விழுந்து 3 இந்தியர்கள் கூட உயிரிழந்த சோக சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.

English summary
A heavy snowstorm in North America left people there shivering. Dubbed Palm Storm, the blizzard brought the most extreme cold a generation had ever seen. The normal life of the people was completely paralyzed due to frost as the temperature dropped below minus 10 degrees. In this situation, videos about the severe damage caused by the storm are now spreading on the Internet one by one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X