வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“சீருடை மனிதன்” துப்பாக்கியை எடுத்து.. 6 பேர் பலி! அலறிய அமெரிக்கா -சோகத்தில் முடிந்த சுதந்திர தினம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் 246 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி இருக்கின்றன.

அனைத்து நகரங்களிலும் அணி வகுப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்கள் கொண்டாட்ட களிப்பில் உள்ளார்கள்.

மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி மாட்டிகிச்சு.. இத விட்றாதீங்க! காங்கிரசின் ஸ்கெட்ச் - கையை பிசையும் பாஜக.. எதிராக திரும்பிய கத்தி

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோவின் புறநகர் பகுதியான ஹைலேண்ட் பூங்கா அருகே சுதந்திர திண அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது ஒரு நபர் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றனர்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

துப்பாக்கிச்சூடு காரணமாகவும், கூட்ட நெரிசலில் சிக்கியதாலும் படுகாயமடைந்த 24 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போலீசார் அங்கு, கிடந்த துப்பாக்கி ஒன்றையும் கண்டெடுத்து இருக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் யார்? அவரது பின்னணி உள்நோக்கம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீருடையில் மர்ம நபர்

சீருடையில் மர்ம நபர்

இதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஒரு நபர் அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் துப்பாக்கியுடன் நடமாடியது பதிவாகி உள்ளது. சீருடை போன்ற உடை அணிந்திருந்த அந்த நபர், தலையில் தொப்பி போட்டிருந்தார். அணிவகுப்பு நடைபெற்ற ஹைலேண்ட் பூங்கா பகுதியில் கட்டிட மேற்கூரையில் ஒரு நபர் சந்தேகமளிக்கும் விதமாக சென்றதை அப்பகுதியை சேர்ந்த சில பார்த்து உள்ளார்கள். இதனை அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உறுதிபடுத்தி இருக்கின்றன.

துப்பாக்கி கலாச்சாரம்

துப்பாக்கி கலாச்சாரம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த மே 24 ஆம் தேதி பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த மே 10 ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள கடை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். அமெரிக்காவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார். இதற்கான மசோதாவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Gun Shoot in American Independence day parade killed 6 people in Chicago : அமெரிக்காவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X