'நான் ஏலியன் தான்' நெட்டிசனின் கேள்விக்கு பதில்.. அதிரடிகளுக்கு மத்தியில் ஃபன் பண்ணும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க் ''நான் ஒரு வேற்றுகிரகவாசி.. எனது சொந்த கிரகத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்'' என்று பதில் அளித்தார். தற்போது இந்த ட்விட் இணையத்தில் பரவி வருகிறது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கருத்து பரிமாற்றங்களுக்கு முக்கிய சமூக வலைத் தளமாக விளங்கும் ட்விட்டரை கடந்த சில தினங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

அடுத்தடுத்து அதிரடி
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அடுத்தடுத்து அதிரடிகளை எலான் மஸ்க் காட்டி வருகிறார். குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் சி இ ஓவாக இருந்த இந்தியரான பராக் அகர்வாலை அதிரடியாக நீக்கினார். அவரோடு வேறு சில உயர் அதிகாரிகளையும் கழற்றிவிட்டார். எலான் மஸ்க் காட்டும் அதிரடிகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆள்குறைப்பில் தொடங்கி, புளூ டிக் வசதிக்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

பலரும் எதிர்ப்பு
எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைகளுக்கு ட்விட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து எலான் மஸ்க்கை விமர்சனமும் செய்து வருகின்றனர். ஆனாலும் இதற்கு சற்றும் சளைக்காத எலான் மஸ்க், யார் என்ன சொன்னாலும் புளு டிக் வசதியை பெற 8 டாலர் செலுத்தியே தீர வேண்டும் என்றும் திரும்ப திரும்ப பதிவிட்டு வருகிறார். இதில் இருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கும் திட்டம் இல்லை என்பதை உறுதிபட எலான் மஸ்க் கூறுவதாக தெரிகிறது.

ஊழியர்கள் பணிநீக்கம்
நாளொன்றுக்கு 4 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகளை கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எனக்கு வேறு வழியில்லை எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடைமுறையும் தொடங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ட்விட்டர் ஊழியர்கள் பலரும் மெயில் வரத்தொடங்கியிருப்பதாக கூறியிருக்கின்றனர்.

எலான் மஸ்க்கிடம் கேள்வி
இத்தனை பரபரப்புக்கு மத்தியில் எலான் மஸ்க் டிவிட்டரில் நெட்டிசன்கள் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலும் அளித்து வருகிறார். அந்த வகையில் டிம் அர்பன் என்ற யூசர் ஒருவர், எலான் மஸ்க்கிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அதில், உங்களைப் பற்றி பரப்பப்படும் வினோதமான பல்வேறு கதைகளில் (theory) எது உண்மையாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

நான் ஒரு வேற்றுகிரகவாசி
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் ''நான் ஒரு வேற்றுகிரகவாசி.. எனது சொந்த கிரகத்திற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்'' என்று பதில் அளித்தார். எலான் மஸ்க்கின் இந்த ட்விட் இணையவாசிகள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இத்தனை பரபரப்புக்கு மத்தியிலும் எலான் மஸ்க் கூலாக பதிவிட்டு வருவதாக நெட்டிசன்கள் பலரும் கூறிவருகின்றனர்.
-
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
நட்புன்னா.. இதுதான்! வேலையைவிட்டுட்டு நண்பனுக்காக உதவ நடுரோட்டுக்கு வந்த சயின்டிஸ்ட்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications