வெளிநாடு போய்ட்டு வந்து பையை திறந்து பார்த்தா? அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரிய பெண்.. பரபர சம்பவம்
வாஷிங்டன்: குரோஷியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு வீட்டில் வந்து ஆசையோடு சூட்கேசை திறந்த நிலையில், அதில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 18 தேள்கள் படையெடுத்து வந்த ஆஸ்திரிய பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெளிநாடு பயணம் போகும் எல்லாரும், சுற்றுலா சென்ற நாட்டில் கிடைக்கும் வித்தியாசமான பல பொருட்களை வீட்டுக்கு வாங்கி வருவது வழக்கம்.
அதுவும் நம் நாட்டில் கிடைக்காத பொருட்களை பலரும் ஆர்வத்துடன் வாங்குவர். இதேபோல் வெளிநாட்டில் இருந்து வாங்கி விட்டு, சொந்த ஊர் திரும்பியதும் அதனை வீட்டில் வந்து அதை ஆசை ஆசையாய் திறந்து பார்ப்பதும் வழக்கம்.

அழையாய் விருந்தாளியாய். .
அதுவும் தனது சொந்தக்காரர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் தான் அதனை திறந்து பார்ப்பார்கள். இப்படி ஆசையோடு திறந்து பார்க்கும் போது, தாங்கள் ஆசையாய் வாங்கிய பொருட்களுக்கு முன்பாக அழையாய் விருந்தாளியாய் விஷ ஜந்துக்கள் வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதிர்ச்சியில் உறைந்து விட மாட்டோமா... அப்படிதான் ஆஸ்திரியாவின் நட்டர்ன்பட்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடந்துள்ளது. அந்த பெண் குரோஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

18 தேள்கள்
தனது பயணம் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்ததும், சற்று இளைப்பாறிவிட்டு தனது லக்கேஜ் பையை திறந்துள்ளார். திறந்ததும் அந்த சூட்கேசில் இருந்து அணி அணியாக தேள் தனது குடும்பம் குட்டியுமாக படையெடுத்துள்ளன. இதைப்பார்த்து திடுக்கிட்ட அந்த பெண் அலறியடித்துள்ளார். பின்னர் வீட்டில் கிடந்த குச்சியை எடுத்து ஒவ்வொரு தேள்களையும் வெளியே தட்டி விட்டு கொண்டு இருந்தார். எனினும் இதற்கெல்லாம் சளைக்காத தேள்கள் ஒவ்வொன்றாக அணி வகுத்து சூட்கேசில் இருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. மொத்தம் 18 தேள்கள் வெளியில் வந்தன.

வனத்துறையினர் பிடித்து சென்றனர்
இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள விலங்குகள் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த விலங்குகள் மீட்பு குழுவினர், தேள்கள் அனைத்தையும் பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்துச்சென்றனர். அதன்பிறகே அந்தப் பெண் நிம்மதி அடைந்துள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று விட்டு வந்ததும் வீட்டில் ஆசை ஆசையாய் லக்கேஜ் பையை திறந்தால் இப்படியா நடக்கும் என நெட்டிசன்களும் இந்த செய்தி குறித்து நன்றாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

3-வது சம்பவம்
தற்போது பிடிக்கப்பட்டுள்ள தேள்கள் அனைத்தையும், அதன் தாய்வீடான குரோஷியாவிற்கே திருப்பி அனுப்பும் பணி நடப்பதாக விலங்குகள் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இங்கேயே அவை பல்கி பெருகிவிடும் என்றாலும், அவை அந்நாட்டில் இர்ந்து வந்துள்ளவை என்பதால் திருப்பி அனுப்பபோவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரியாவில் இதுபோன்று நடக்கும் மூன்றாவது நிகழ்வு இது எனக்கூறப்படுகிறது. அராக்னிடா குடும்ப வகையை சேர்ந்த தேள்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதங்கள் உள்ளன. எனினும், இவற்றில் 30 முதல் 40 வகை தேள்கள் மட்டுமே மனிதனை கொல்லும் அபாயம் கொண்டதாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications