பசி குறியீடு.. 101வது இடத்தில் இந்தியா.. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் நம்மை விட முன்னேற்றம்
வாஷிங்டன்: உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா மொத்தமுள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது.
பசி தீவிரமானது என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் இருந்தது.
தற்போதுள்ள பட்டியலின்படி, இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே மோசமாக உள்ளன.

மோசமான நாடுகள்
பப்புவா நியூ கினியா (102), ஆப்கானிஸ்தான் (103), நைஜீரியா (103), காங்கோ (105), மொசாம்பிக் (106), சியரா லியோன் (106), திமோர்-லெஸ்டே (108), ஹெய்தி (109), லைபீரியா (110) ), மடகாஸ்கர் (111), காங்கோ ஜனநாயக குடியரசு (112), சாட் (113), மத்திய ஆப்பிரிக்க குடியரசு (114), யமன் (115) மற்றும் சோமாலியா (116) ஆகியவைதான் நமக்கு பின்னால் இருக்கும் நாடுகளாகும்.

பாகிஸ்தான், வங்கதேசம்
அண்டை நாடுகள் நம்மை விட இந்த விஷயத்தில் முன்னேறியுள்ளன. பாகிஸ்தான் 92 வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் 76வது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன.

சோமாலியா மோசம்
2021 தரவரிசைப்படி சோமாலியாவில் பசியின் அளவு அதிகமாக உள்ளது - அதன் மதிப்பெண் 50.8. இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, மடகாஸ்கர் மற்றும் யேமன் - மற்றும் 31 நாடுகள் கடுமையான பசி நிலையை எதிர் கொண்டுள்ளன என்று இந்த புள்ளி விவரம் கூறுகிறது.

பசி குறியீடு குறைந்து வருகிறது
2000ம் ஆண்டு முதல் உலகளாவிய பசி குறியீடு குறைந்து வருகிறது என்றாலும், முழுமையாக பசியற்ற நாடுகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டியுள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

2030ம் ஆண்டு இலக்கு
2030ம் ஆண்டுக்குள் பசியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி, நாம் முன்னேற வேண்டியுள்ளது. போசாக்கு குறைபாடு, குழந்தைகள் வீணாக்குதல், குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை வைத்து பசி குறியீடு உருவாக்கப்படுகிறது. இந்த வகையில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா, இந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது. பொருளாதார வளர்ச்சி, சுகாதாரத் துறை வளர்ச்சி போன்றவைதான் இந்த பிரச்சினையை சரி செய்யும் வழியாகும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications