வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க தேர்தல்- நினைத்தே பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கலாம்: சர்வதேச பார்வையாளர்கள் அச்சம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2020 என்பது சாத்தியமில்லாத, நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்கள் நிகழ்ந்த ஆண்டு. ஏன் இன்னமும் நிகழக்கூடிய ஆண்டும் கூட அமெரிக்கா அதிபர் தேர்தலில் இதுவரை நடக்காத ஒரு அபாயங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அமைப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் வாக்குப்பதிவின் தன்மையை மாற்றும் வல்லமை கொரோனா தொற்று நோய்க்கு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக ஆதாரங்கள் இல்லாமலேயே, அதிபர் தேர்தல் வாக்குப்பதிவை கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள். எனவே அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளுக்கு பின்னர் அரசியலமைப்பு நெருக்கடிக்கும் வன்முறைக்கும் கூட வழிவகுக்கும் என்றும் தேர்தல் பார்வையாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

ஏனெனில் அதிபர் தேர்தல் தபால் வாக்குகள் தொடங்கி தேர்தல் பிரச்சாரம் வரை ஒவ்வொரு விஷயத்திலும் இப்போதைய அதிபரும், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவருமான டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள். ஏனெனில் இந்த எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் கடும் போட்டி அளித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நோய் எதிர்ப்பு சக்தி ட்வீட்... எச்சரித்த ட்விட்டர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நோய் எதிர்ப்பு சக்தி ட்வீட்... எச்சரித்த ட்விட்டர்

2 முறை வாக்குப்பதிவு

2 முறை வாக்குப்பதிவு

இந்நிலையில் வாக்குப்பதிவு முறையாக நடக்கிறதா என்பதை சோதிக்க இரண்டு முறை வாக்களிக்குமாறு வாக்காளர்களை அதிபர் டிரம்ப் ஊக்குவித்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை வாக்களிப்பது குற்றம் ஆகும். தேர்தலை மோசடி செய்ய வெளிநாட்டு நாடுகள் மெயில்-இன் வாக்குகளை (தபால் வாக்குகளை) அச்சிடுவதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் தனது ஆதரவாளர்களை தேர்தல் நடைபெறுவதை சென்று கவனிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் நவம்பரில் தேர்தல் எப்படி அமைதியாக நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி டிரம்ப் தேர்தலில் தோற்றால் முடிவை ஏற்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.

வெளிநாட்டு சதி

வெளிநாட்டு சதி

தேர்தல் நாளில் முறைகேடு நடைபெறவில்லை என்பதை பார்ப்பதற்காக மட்டுமே சம்பிரதாயத்திற்காக பார்வையாளர்கள் அன்றைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றபடி முறைகேடு நடக்கவாய்ப்பே இல்லை எனவே டிரம்பின் பேச்சுகளில் சிறிதளவும் உண்மை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதேநேரம் வெளிநாடுகளில் இருந்து அதிபர் தேர்தலை சீர்குலைத்து முறைகேடு நடத்த வாய்ப்பு இருப்பதாக சொல்வது ஆபத்தானது என்று தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்

அணி திரட்ட முடியும்

அணி திரட்ட முடியும்

தென்னாப்பிரிக்க தேர்தல் நிபுணர் ட்ரென் நுபன் கூறுகையில். " அதிபர் ட்ரம்ப் மோசமான தேர்தலின் கதைக்கு எங்களை தயார்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன், நான் பணியாற்றிய மற்ற அதிகார வரம்புகளிலும் இது நிகழ்ந்துள்ளது "டிரம்ப்பின் இந்த தேர்தல் நியாயமாக இருக்கப் போவதில்லை என்று வாக்காளர்களின் மனதில் விதைத்துவருகிறார். அவர் பற்ற வைத்து வரும் நெருப்பு பின்னர் வெடிகுண்டு போல் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது. மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி வாக்காளர்களை அணிதிரட்ட முடியும் என்று "நுபன் கூறினார்.

சர்வதேச பார்வையாளர் அச்சம்

சர்வதேச பார்வையாளர் அச்சம்

ஜிம்பாப்வேயின் 2008 ஜனாதிபதித் தேர்தலை நுபென் மேற்கோளிட்டுள்ளார், அங்கு தற்போதைய ராபர்ட் முகாபேவின் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சி வாக்காளர்களை வன்முறையில் குறிவைத்தனர். முகாபே சில தாக்குதல்களை வழிநடத்த இராணுவத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, அது போன்று நடந்தால் அமெரிக்காவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்று எச்சரித்தார்.

English summary
election observers, organizers and commentators in Africa, Europe and the US fear that there are significant warning signs for the upcoming US elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X