அடங்கேப்பா சூப்பர்.. 'வேற லெவல் அப்டேட் கொடுத்த கூகுள்'.. பயனர்கள் குஷி!
வாஷிங்டன்: பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுளில் புதிதாக மல்டி செர்ச் ஆப்ஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியினை, வருகிற அக்டோபர் மாதம் முதல் அமெரிக்க பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழி தேடுவது முதல் எந்த ஒரு பொருளை பற்றியும் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது இணையமாகத்தான் இருக்கும்.

கூகுள்
அதிலும் இணையத்தில் தேடு பொறி நிறுவனமான கூகுள் தான் நம்பர் 1 இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. யாகூ உள்ளிட்ட பிற தேடு பொறி நிறுவனங்கள் இருந்தாலும் கூகுளை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. மின்னஞ்சல் முதல் டிரான்ஸ்லேட், மேப்ஸ், டிரைவ் என கூகுள் பல வசதிகளை பயனர்களுக்கு வாரி வழங்கி வருகிறது. அடிக்கடி அப்டேட்களையும் அள்ளிவிட்டு இணைய உலகில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வரும் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புது அப்டேட்தான் இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

விஷூவலைஸ்ட் முடிவுகள்
இந்த நிலையில் கூகுள் செர்ச்சில் மேலும் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் அம்சங்களின் படி இனி பெரும்பாலும் நாம் கூகுளில் ஏதாவது ஒன்றை தேடினால் விஷூவலைஸ்ட் முடிவுகளாக கிடைக்கும் படி புதிய வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கூகுளில் செர்ச் செய்து ஏதாவது ஒன்றை தேடினால் அதன் முடிவுகள் இனி டெக்ஸ்ட் கண்டெண்டுகளாக காட்டுவதை விட படங்கள் மற்றும் வீடியோக்களாகவும் காண்பிக்கப்படும்.

எவ்வாறு காட்டப்பட வேண்டும்
மல்டி செர்ச் ஆப்ஷன் ஒன்றும் புதிதாக இடம் பெறுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல விஷயங்களை நம்மால் தேட முடியும். நாம் என்ன தேட விரும்புகிறோம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற முடிவுகளை காட்டும் வகையில் புதிய செர்ச் ஆப்ஷனில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தேடல் முடிவுகள் விரைவாக கண்டறிய உதவும் வகையில், செர்ச் ரிசல்ட்கள் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதும் சீரமைக்கப்பட்டுள்ளது.

மல்டி செர்ச் ஆப்ஷன்
மல்டி செர்ச் ஆப்ஷன் கடந்த ஏப்ரல் மாதத்தில் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் அறிமுகம் ஆன இந்த வசதி விரைவில் 70 மொழிகளிலும் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமேஜ் மற்றும் டெக்ஸ்ட் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் பல விஷயங்களை தேடும் வசதி இந்த மல்டி செர்ச் ஆப்ஷன் கொடுக்கிறது.

அக்டோபர் முதல்..
குறிப்பாக பயனர்கள் ஒரு விஷயத்தை தேடினால் இமேஜ்கள் காட்டுவதை விட கூடுதலாக அது சம்பந்தப்பட்ட வீடியோ, புகைப்படம், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவற்றையும் காட்டும் வகையில் புதிய அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மல்டி செர்ச் ஆப்ஷன் வசதி வரும் அக்டோபர் மாதம் முதல் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் பயன்படுத்த முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
-
லேசாக கண் அசைத்த புதின்.. உக்ரைன் மீது குண்டு மழையாக பொழிந்த 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள்.. பதற்றம்! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications