வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானியல் அதிசயம்.. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகம்.. கச்சிதமாக படம் பிடித்துள்ள ஜேம்ஸ்வெப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரகத்தின் படத்தை முதல்முறையாக ஜேம்ஸ் டெலஸ்கோப் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும் விண்வெளியில் இருக்கும் பிற கோள்கள் குறித்தும் அறிந்து கொள்ள உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது.

விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஒவ்வொரு முறையும் பல அரிய தகவல்கள் வெளியாகி பொதுமக்கள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

வெள்ளத்திற்கு முன்பும்.. இப்போதும்.. பாகிஸ்தானே மாறிப்போச்சே.. நாசா வெளியிட்ட சாட்டிலைட் படங்கள்வெள்ளத்திற்கு முன்பும்.. இப்போதும்.. பாகிஸ்தானே மாறிப்போச்சே.. நாசா வெளியிட்ட சாட்டிலைட் படங்கள்

 ஜேம்ஸ்வெப்

ஜேம்ஸ்வெப்

இதற்கிடையே பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் என்ற டெலஸ்கோப்பை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. விண்வெளியில் இருந்து கொண்டு ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் அனுப்பும் படங்களை அமெரிக்காவின் நாசா வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரகத்தின் படம் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.

 புதிய படம்

புதிய படம்

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் சக்தி வாய்ந்த ஒளியியல் அமைப்பைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் படங்களை எடுத்துள்ளனர். HIP 65426 என்ற புதிய கிரகத்தின் படங்களை நாசா இன்று வெளியிட்டு உள்ளது. இந்த HIP 65426 கிரகம் பூமியைக் குறைந்த வயது உடையது என்றாலும் கூட இது அளவில் பூமியை விட பெரியதாகும்.

 பூமியை விட பெரியது

பூமியை விட பெரியது

இது வியாழனின் எடையை விட 6 முதல் 12 மடங்கு பெரியதாகும். இது 15 முதல் 20 மில்லியன் வயதானது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுபோன்ற துல்லியமான தரவுகள் கிரகத்தின் அளவு மற்றும் வயதை மிகவும் துல்லியமாகத் தீர்மானிக்க உதவும் என்று நாசா கூறுகிறது. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இந்த கிரகத்தை நான்கு வெவ்வேறு பில்டர்கள் மூலம் படம்பிடித்துள்ளது.

முக்கியம்

முக்கியம்

இதன் மூலம் கூடுதல் தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இதை மிகப் பெரிய சாதனையாகக் குறிப்பிடும் நாசா ஆய்வாளர்கள், ஒட்டுமொத்த வானியல் துறைக்கே இது முக்கியமான நாள் என்கிறார்கள். எக்ஸோபிளானெட் எனப்படும் சூரியக் குடும்பத்திற்கு வெளியே, ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம் இவ்வளவு துல்லியமாகப் படம் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 எக்ஸோபிளானெட்

எக்ஸோபிளானெட்

இந்த எக்ஸோபிளானெட் சில சமயங்கள் நட்சத்திரங்களைச் சுற்றி வரும். பல நேரங்களில் இவை எந்தவொரு நட்சத்திரத்தையும் சுற்றாமல், விண்வெளியில் சுதந்திரமாக மிதந்து வரும். இதுவரை படம் பிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் இரும்பு அல்லது கார்பனைத் தவிர, சிலவற்றில் நீர் மற்றும் பனியையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடினம்

கடினம்

1990களிலேயே விண்வெளியில் இதுபோன்ற எக்ஸோபிளானெட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்து இருந்தாலும் கூட, இவ்வளவு துல்லியமாக அதன் படங்கள் எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். எக்ஸோபிளானெட்டை பல்வேறு முறைகளில் கண்டறியலாம். இருப்பினும், அது சுற்றி வரும் நடச்சித்திரம் மிகப் பெரியதாக இருக்கும் என்பதால், அதில் இருந்து வரும் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்பதால் எக்ஸோபிளானெட்டை கண்காணிப்பதும் படம் பிடிப்பதும் மிகவும் கடினம்.

English summary
James Webb Telescope's new image of planet outside solar system: Picture of outside solar system by James Webb Telescope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X