ஒரு லாரி அளவு இருக்கும்.. பூமியை நெருங்கிய சிறு கோள்.. என்ன நடந்தது.. நாசா கொடுத்த அப்டேட்

ஒரு பெரிய டிரக் அளவிலான சிறுகோள் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருவதை நாம் அனைவரும் படித்து அறிந்து இருக்கிறோம். அதேபோல் சிறுகோள்கள், தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அந்த வகையில், ஒரு பெரிய டிரக் அளவிலான சிறுகோள் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் 11 அடி முதல் 28 அடி கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.

நாம் வாழும் இந்த பூமி மற்றும் பல்வேறு பேரதிசயங்களை கொண்டது. அதேபோல், பிரபஞ்சமும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெரும் அதிசயங்களை உள்ளடக்கியது.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் எண்ணற்ற கோள்கள் உள்ளன. பல்வேறு பேரதிசயங்களை கொண்ட இந்த பிரபஞ்சம் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுகோள்கள், ,தூசி, கற்கள்

சிறுகோள்கள், ,தூசி, கற்கள்

விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் சந்திரனில் கால் வைத்தாலும் கூட இன்னும் மனிதனால் தொடமுடியாத பல பாகங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன. சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருவதை நாம் அனைவரும் படித்து அறிந்து இருக்கிறோம். அதேபோல் சிறுகோள்கள், ,தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

சூரியனை ஒருமுறை சுற்றி வர

சூரியனை ஒருமுறை சுற்றி வர

இவை ஒவ்வொன்றும் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் என்பது மாறுபட்டதாகும். சூரியனுக்கு மிகவும் அருகே உள்ள சில வால் நட்சத்திரங்கள் ஆண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வருகின்றன. நீண்ட தொலைவில் உள்ள வால் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை மட்டுமே சூரியனை சுற்றி வரக்கூட செய்கின்றன. அதிகபட்சமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி விட்டு செல்லும் எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பூமி மீது மோத வந்த சிறுகோள்

பூமி மீது மோத வந்த சிறுகோள்

அதேபோல பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல சிறுகோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய கோள்கள் அவ்வப்போது பூமியை கடந்து செல்வதுடன், அரிதாக மோதுகின்றன. இந்த நிலையில், பூமியை மிக நெருக்கமாக பெரிய சிறுகோள் ஒன்று கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமிக்கு மிக நெருக்கமாக வந்த சிறுகோள்களில் இதுவும் ஒன்று எனக்கூறிய விஞ்ஞானிகள் தகவல் தொடர்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்களுக்கு மிக அருகாமையில் அதாவது 3,600 கி.மீட்டர் தொலைவில் கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 11 அடி முதல் 28 அடி கொண்டதாக

11 அடி முதல் 28 அடி கொண்டதாக


இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒருவேளை பூமிக்கு நெருக்கமாக இந்த சிறுகோள் வந்தாலும் கூட வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். மீதமுள்ளவை விண்கற்களாக மட்டுமே பூமி மீது விழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 2023 BU - என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் 11 அடி முதல் 28 அடி கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+