'2014-ம் ஆண்டில் பூமியில் விழுந்த விண்கல்'. . இப்போது கடலில் தேடும் விஞ்ஞானிகள் .. எதற்காக தெரியுமா?
வாஷிங்டன்: கடந்த 2014-ம் ஆண்டு பூமியில் விழுந்ததாக கூறப்படும் விண்கல்லை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பபுவா நியூ கினியா கடல்பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது.
சூரியக்குடுமபத்தில் உள்ள 8 கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இது ஒரு அதிசயம் என்று கூட சொல்லலாம்.
இதேபோல் நமது கற்பனைக்கு எட்டாத, விண்மீன் கூட்டம், பால்வெளி அண்டம் என ஏராளமான அதிசயங்கள் விண்ணில் நிறைந்திருக்கின்றன. அது தொடர்பான ஆய்வுகளிலும் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது விண்கல் மோதியதா? என்ன நடந்தது? நாசா என்ன சொல்கிறது?'

தற்போது தேடும் பணி
அது போல தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூமியின் கடல் பகுதியில் விண்ணில் இருந்து விண்கல் ஒன்று விழுந்ததாக பலராலும் நம்பப்படுகிறது. எனவே இது எதனால் நிகழ்ந்தது, உண்மையில் கடலில் இந்த விண்கல் கிடக்கிறதா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இது குறித்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். கடந்த2014-ம் ஆண்டு சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வந்ததாக நம்பப்படும் விண்கல் ஒன்று பபுவா நியூ கினியா கடல்பகுதியில் விழுந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விண்கல் விழுந்த நிலையில், இது தொடர்பான ஆராய்ச்சியை தற்போது விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர். ஆம் இந்த விண்கல் எப்படி பூமியில் விழுந்தது? எங்கு விழுந்துள்ளது? என்பது குறித்து முழு ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முதல் கட்டமாக விண்கல் விழுந்ததாக கருதப்படும் கடலின் ஆழத்தில் இந்த பெரிய விண்கல்லை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பபுவா நியூகினியா கடல் பகுதியில்
இதற்கு முன்பாக ஓமுவாமுவா மற்றும் போரிசவ் ஆகிய விண்கற்கள் மட்டுமே நட்சத்திரங்களுக்கு இடையேயான விண்கல்லாக அறியப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டில் பபுவா நியூகினியா கடல் பகுதியில் விழுந்த விண்கல், இந்த இரண்டு விண்கற்களுக்கும் அப்பால் உள்ளவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விண்கல் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர் அவி லியோப் மற்றும் மாணவர் அமிர் சிராஜ் ஆகிய இருவரும் இந்த விண்கல், நட்சத்திரங்களுக்கு இடையேயான தோற்றங்களை கொண்டது என்ற முடிவுக்கு வந்தனர்.

கண்டுபிடிப்பது கடினம்
எனினும் உரிய தரவுகள் இல்லாததால் இந்த விண்கல் நட்சத்திரங்களுக்கு இடையேயான தோற்றங்களை கொண்டது என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்க விஞ்ஞானிகள் சமூகம் ஏற்க மறுத்து விட்டது. பூமி வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரிந்து சாம்பல் ஆனதால் கடல் பரப்பில் சிறு சிறு துகள்களாக சிதைந்து இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், விண்கல்லின் எச்சங்களை கடலில் கண்டுபிடிப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

உண்மையில் இது இயற்கையானதா?
இதனால், மிகப்பெரிய இழுவைக்கப்பலில் காந்தத்தன்மை கொண்ட பொருளை பயன்படுத்தி விண்கள் சிதறல்களை எடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் குழுவினர் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது. முன்னதாக லியோப் கடந்த ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ''விண்கல்லை தேடி ஆய்வு செய்வதன் மூலம் உண்மையில் இது இயற்கையானதா? அல்லது செயற்கையானதா? அல்லது வெறும் பாறையா? என்பதை உறுதி செய்ய முடியும்" என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications