வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகிலேயே நாங்கள்தான் பெஸ்ட்.. நிறைய கொரோனா சோதனை செய்கிறோம்.. டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா சோதனையை மற்ற நாடுகளை காட்டிலும் மிகச் சிறப்பாக நாங்கள் மேற்கொண்டதால்தான் 10 லட்சத்திற்கு மேலான நோயாளிகளை கண்டறிய முடிந்தது என அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டிக் கொண்டார்.

Recommended Video

    மெல்ல மெல்ல மீண்டு வரும் நியூயார்க்

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,35,765 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 59,266 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 25,409 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,42,238 ஆகும்.

    மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத நகராக மாறியது திருச்சி மாநகரம்.. 26 பேரும் குணமாகினர்! மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத நகராக மாறியது திருச்சி மாநகரம்.. 26 பேரும் குணமாகினர்!

    1 மில்லியன்

    1 மில்லியன்

    உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3-இல் 1 பங்குதான் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆகும். இந்த நிலையில் இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 மில்லியன் எண்ணிக்கையை தாண்டியது.

    தங்கியே

    தங்கியே

    இதற்கு காரணம் நாங்கள் அதிகமான நபர்களுக்கு நடத்திய கொரோனா சோதனையால்தான். உலகில் மற்ற எந்த நாடுகளும் செய்யாத அளவுக்கு கொரோனா சோதனைகளை சிறப்பாக செய்துள்ளோம். டெஸ்டிங்கில் மற்ற நாடுகள் எங்களைவிட பின் தங்கியே இருக்கிறது என்றார்.

    சோதனை

    சோதனை

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி அந்தோணி பவுசி கூறுகையில் சோதனை திறனை அதிகரிக்க யாருக்கெல்லாம் சோதனை தேவையோ அவர்களுக்கெல்லாம் செய்கிறோம். அனைத்து அமெரிக்கர்களுக்கும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ கொரோனா சோதனையை செய்து முடித்துவிடுவோம். அனைவரும் சோதனைக்குட்படுத்த வேண்டும்.

    கான்டாக்ட் டிரேசிங்

    கான்டாக்ட் டிரேசிங்

    அந்த வகையில்தான் நாங்கள் அணுகுகிறோம். அடையாளம் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், கான்டாக்ட் டிரேசிங் ஆகிய காரணிகள் மூலம் சோதனை செய்து நாட்டை பாதுகாப்பானதாக கொண்டு செல்வோம் என்றார். இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை காட்டிலும் அதிகமான நபர்களுக்கு நாங்கள்தான் கொரோனா சோதனைகளை செய்து வருகிறோம். அதனால்தான் எங்களுக்கு அதிக எண்ணிக்கை காட்டுகிறது என இந்தியாவை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வம்பிழுத்த டிரம்ப் தற்போது எந்த நாடுகளையும் குறிப்பிடாமல் அதே கருத்தையே கூறியுள்ளார்.

    English summary
    American President praises himself that his country has reported 10 lakh corona virus cases only because of the testing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X