உக்ரைனில் போருக்கு இடையே.. ஆசியர்களுக்கு இனபாகுபாடு.. மாணவர்களை சீண்டும் பாதுகாப்பு படையினர்
வாஷிங்டன்: உக்ரைனில் போர் நடப்பதால் அங்கிருந்து நாடு திரும்பும் ஆப்பிரிக்கா, ஆசிய மாணவர்களிடம் காட்டப்படும் இனபாகுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க செனட்டர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதரிடம் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. 9வது நாள் ஆனபோதிலும் போர் இன்னும் முடிவடையவில்லை.தொடர்ந்து உக்ரைனில் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடந்து வருகிறது.
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

இன பாகுபாடு
இந்தியா உள்பட பிறநாடுகளில் இருந்து அங்கு படிக்க சென்ற மாணவர்களும் தாயகம் திரும்பி வருகின்றனர். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்நிலையில் தான் உக்ரைனில் இனபாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரை காப்பாற்றி கொள்ள உக்ரைனின் மேற்கு எல்லை வரும் ஆப்பரிக்கா, ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களை எல்லை தாண்ட விடாமல் உக்ரைன் பாதுகாப்பு படை வீரர்கள் பாகுபாடு காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரயில், பஸ்களில்...
இது அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர் ஐநாவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛உக்ரைனின் மேற்கு எல்லைகளில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை பாரபட்சமாக நடத்துகின்றனர். மொராக்கோ, நைஜீரியா, எகிப்து, இந்தியா மாணவர்களை ரயில்கள், பஸ்களில் அனுமதிக்கப்படுவது இல்லை.

நடவடிக்கை என்ன
உக்ரைனில் படிக்கும் 80,000-க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் தான். இந்த மாணவர்களும் பாதுகாப்பு வழங்குவது அவசியமாகும். இவர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டினரையும் பாரபட்சமாக நடத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனபாகுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்பிரிக்க ஒன்றியம், அமெரிக்கா, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட சபை ஆகியவற்றின் கோரிக்கையாக இதை நான் பிரதிபலிக்கிறேன்'' என கூறியுள்ளார்.

உறுதி செய்ய வேண்டும்
மேலும், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா வழியாகவும் மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். இங்கும் இனம், மதம், மொழி, தேசியத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது . இதை உறுதி செய்ய வேண்டும் என அந்தந்த நாட்டின் தூதர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில்...
முன்னதாக உக்ரைனில் ஆப்பிரிக்கா, ஆசிய மாணவர்களிடம் இன பாகுபாட்டை வெளிப்படுத்துவது தொடர்பாக சர்வதேச தன்னார்வலர்கள், மனித உரிமை வழக்கறிஞர்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications