என்னங்க இது புதுசா! வளிமண்டலத்தில் தென்பட்ட திடீர் நீல நிற 'குமிழ்கள்'.. விளக்கம் அளித்த நாசா
வாஷிங்டன்: பூமியின் வளிமண்டலத்தில் இரண்டு இடங்களில் நீல நிறத்தில் ஒளிரும் குமிழ்கள் தென்பட்டதாக நாசா வெளியிட்ட படம் இணையத்தில் வேகமாக பரவியது. தற்போது இது குறித்து நாசா விளக்கமளித்துள்ளது.
நாம் வாழும் இந்த பூமியில் இன்னும் மனித இனத்தால் கண்டுபிடிக்க முடியாத பல ஆச்சர்யங்கள் நிறைந்து இருக்கின்றன.
பூமி மட்டும் அல்ல பிரபஞ்சத்திலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான அதிசயங்கள் நிறைந்துள்ளன.

விண்வெளி குறித்த ஆராய்ச்சி
ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவதையெல்லாம் தாண்டியும் விசித்திரங்களும் இந்த பிரபஞ்சத்திலும் பேரண்டத்திலும் இருப்பதை விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்கிறார்கள். இதனால் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையமும் பூமியின் கீழ் வட்டப்பாதையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தில் இருந்து ஆராய்ச்சிகளை விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நீல நிறத்தில் ஒளிரும் குமிழ்கள்
அவ்வப்போது விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை படம் எடுத்து நாசா வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் தெற்காசியாவை கடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட படத்தை நாசா பகிர்ந்து இருந்தது. இந்த படத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இரண்டு இடங்களில் நீல நிறத்தில் ஒளிரும் குமிழ்கள் தென்பட்டன. இந்த படம் இணையத்தில் வேகமாக பரவியது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் வியக்க வைக்கும் அளவில் இருந்தது.

ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது
இருந்தாலும் வளிமண்டலத்தில் வினோதமாக தென்பட்ட இந்த படம் குறித்து நெட்டிசன்கள் மத்தியிலும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. வளிமண்டலத்தில் தென்பட்ட இந்த இரண்டு ஒளிரும் குமிழ்களில் ஒன்று தாய்லாந்து வளைகுடாவிற்கு மேற்பரப்பிலும் மற்றொரு தென் சீனக்கடலின் அடிவானப்பகுதியிலும் தோன்றியதாக நாசா விளக்கம் அளித்துள்ளது. இந்த இரண்டு ஒளி பிழம்புகளும் ஒரே நேரத்தில் தென்பட்டாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது எனவும் நாசா விளக்கம் அளித்துள்ளது.

ஒளிக்கீற்று குமிழ்கள் போல
இது குறித்து நாசா மேலும் கூறுகையில், படத்தின் கீழ் பகுதியில் தென்படும் குமிழ்கள், தாய்லாந்து வளைகுடா பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரும் மின்னலின் தாக்கம் என்று தெரிவித்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற மின்னல்கள் ஏற்படும் போது மேகக்கூட்டங்கள் மறைத்துக்கொள்ளும் என்பதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தெரியாது. ஆனால், இந்த படத்தில் மேகக்கூட்டங்களுக்கு இடையே இருந்த இடைவெளி மூலமாக இந்த ஒளிக்கீற்று குமிழ்கள் போல தெரிவதாக நாசா தரிவித்துள்ளது.

நாசா விளக்கம்
அதேபோல், படத்தின் வலது பக்க மேல் பகுதியில் காணப்படும் ஒளி குமிழ் வளிமண்டலத்தின் சிதறல் விளைவினால் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் வேளையில் வானம் நீல நிறமாக தோன்றுவதற்கும் இதுவே காரணம் ஆகும். படத்தின் இடது பக்கத்தில் சில ஒளிச்சிதறல்கள் தென்படுவது தென் சீனக்கடலில் மீன்பிடி படகுகளின் வெளிச்சம் என்றும் நசா விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த புகைப்படம் விண்வெளி வீரர் ஒருவரால் எடுக்கப்பட்டதாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications