விண்வெளிக் குப்பைகளால் ஆபத்து.. விண்வெளி ஆய்வு மைய சுற்றுவட்ட பாதையை மாற்றும் நாசா
வாசிங்டன்: 1994 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ரஷ்யா ராக்கெட்டின் குப்பைகள் மோதும் அபாயம் காரணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் சுற்றுவட்ட பாதையை நாசா மாற்றியமைக்க உள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமான அது பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது அமெரிக்கா ரஷ்யா கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன.. இந்த மையத்தில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில் விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களை ஏவுகணைகளை வீசி அளிக்கும் ரஷ்யாவின் செயலால் விண்வெளியில் இருக்கும் ஏழு விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க எச்சரித்தது.

சர்வதேச விண்வெளி நிலையம்
விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தகவல் தொடர்பு வானிலை ஆய்வுக்கு என உலக நாடுகள் அனுப்பிய 7 ஆயிரத்து 500க்கும் அதிகமான செயற்கைக் கோள்களும் சுற்றி வருகின்றன.. செயற்கைக்கோள்களின் செயல்பாட்டு காலம் முடிவடைந்தாலும் அங்கேயே நிலை கொண்டு இருக்கும். இப்படி செயல்படாமல் இருக்கும் தங்கள் நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகணைகளை வீசி தகர்க்கும் பணியில் ரஷ்யா செய்து வருகிறது. ஆன்ட்டி சாட்டிலைட் திசைகள் மூலம் செயற்கைக்கோள்களை அளிக்கும் ரஷ்யாவின் இந்த செயலால் விண்வெளிக் குப்பைகள் அதிகரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

விண்வெளி குப்பைகள்
ரஷ்யா இரண்டு வாரங்களுக்கு முன்னர் விண்வெளியில் நடத்திய செயற்கைக்கோள் தகர்ப்பு நிகழ்வு காரணமாக அந்த செயற்கைக் கோள்களின் பாகங்கள் தற்போது குப்பைகளாக சுற்றிக் கொண்டிருக்கின்றன. சுமார் 1700 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறி உள்ளது எனவும் இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் விண்வெளியில் நடந்து செல்லும்போது அவர்களின் உடைகளை துளைக்கும் ஆபத்து உள்ளதால் விண்வெளி மையத்தின் ஆண்டனாவை சரி செய்யும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சுற்றுவட்ட பாதை
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தின் உடைந்திருந்த ஆண்டனாக்களை சரி செய்யும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து சர்வதேச விண்வெளி மையத்தின் சுற்றுவட்ட பாதையை சற்றே கீழாக நகர்த்தி வைக்க நாசா திட்டமிட்டுள்ளது. பொதுவாக சர்வதேச விண்வெளி மையத்தின் சுற்றுவட்டார பாதை நகர்த்தல்கள் ஒரு வழக்கமான நிகழ்வுதான். 1999 முதல் 25க்கும் மேற்பட்ட முறை சர்வதேச விண்வெளி மையத்தின் சுற்றுவட்டார பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ராக்கெட்
இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ரஷ்ய ராக்கெட் பாகங்கள் விண்வெளிக் குப்பைகள் ஆக மாறி சர்வதேச விண்வெளி ஆய்வு மீது மோத வாய்ப்புள்ளதால் இன்று 4 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்ட பாதை சற்றே மாற்றி அமைக்கும் நிகழ்வினை நாசா மேற்கொள்ள உள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டும் மே 19ஆம் தேதி ரஷ்யாவின் ஏவப்பட்ட பெகாஸ்சஸ் ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் 39915 என பெயரிடப்பட்ட விண்வெளி குப்பைகளாக உள்ளது. 1996ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி ராக்கெட்டின் பாகங்கள் தகர்க்கப்பட்ட பிறகு தற்போது வரை அவை விண்வெளியில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications