வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மறைக்கப்பட்ட பயங்கரம்.. கண்டுபிடித்த அமெரிக்க உளவுதுறை.. சீனாவுக்கு பெரும் சிக்கல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பயங்கரத்தை பெய்ஜிங்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்க உள்ளூர் அதிகாரிகள் முயன்றதை அமெரிக்காவின் உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் உளவு அமைப்பின் புதிய அறிக்கையில் ஜனவரி தொடக்கத்தில் வைரஸின் உண்மையான ஆபத்துகள் குறித்து உலகின் பார்வையில் இருந்து பல நாட்கள் சீன அதிகாரிகள் மறைத்துவிட்டதாக கூறியுள்ளது.இந்த அறிக்கையின் காரணமாக சீனா மீதான அமெரிக்க கொள்கை கடுமையாக பாதிக்கப்படலாம்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் சீனாவின் செயலை அம்பலப்படுத்தி உள்ளனர். சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா தொற்றின் ஆரம்ப வெடிப்பை மூடிமறைத்து, வைரஸ் உலகம் முழுவதும் பரவ அனுமதித்தது என்று கூறியுள்ளனர்.

Recommended Video

    China Corona Vaccine : டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் | Oneindia Tamil

    ஏண்டா டேய் சும்மா இருக்கும்போது பக்கத்துலயே வரமாட்ட.. தூங்கும்போது மட்டும் ஏன் டிஸ்டர்ப் பண்ற?ஏண்டா டேய் சும்மா இருக்கும்போது பக்கத்துலயே வரமாட்ட.. தூங்கும்போது மட்டும் ஏன் டிஸ்டர்ப் பண்ற?

    சீன அதிகாரிகள் தவறு

    சீன அதிகாரிகள் தவறு

    கொரோனா தொடர்பான தகவல் விவாகரத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்குள், ஜனவரி மாதத்தில் சீன அதிகாரிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதை புலனாய்வு அதிகாரிகள் மிகவும் நுணுக்கமான சிக்கலான விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    மறைக்க முயற்சி

    மறைக்க முயற்சி

    அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் புதிய அறிக்கையை நன்கு அறிந்த அமெரிக்க அதிகாரிகள் கூற்றுப்படி, மத்திய சீனாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வைரஸால் ஏற்பட்ட பேரழிவு குறித்து பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பல நாட்கள் மறைக்க முயன்றுள்ளனர் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகரத்திலும் ஹூபே மாகாணத்திலும் அதிகாரிகள் சீனாவின் மத்திய தலைமை தெரிவிக்காமல் மறைக்க முயன்றதாக அறிக்கை முடிகிறது.

    பயந்து நடுங்கிய அதிகாரிகள்

    பயந்து நடுங்கிய அதிகாரிகள்

    பழிவாங்கப்படுவோம் என்று பயந்து நடுங்கிய உள்ளூர் அதிகாரிகள் பெய்ஜிங்கிற்கு தகவல்களை அனுப்புவதை நிறுத்தி வைத்தாக தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த புதிய மதிப்பீடு சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் வைத்து வந்த விமர்சனத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. எனினும் உலகளாவிய நெருக்கடியை உருவாக்கிய சீனாவின் செயல்களை அறிக்கை முழுமையாக அம்பலப்படுத்துகிறது..

    டிரம்ப் என்ன பேசினார்

    டிரம்ப் என்ன பேசினார்

    முன்னதாக அதிபர் டிரம்ப் ஜூலை 4 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் "சீனாவின் ரகசியம், மோசடிகள் மற்றும் மூடிமறைப்பு" ஆகியவை தொற்றுநோய் பரவ காரணம் என்று கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, அந்த வைரஸை பற்றி சீன கம்யூனிஸ்ட் நிர்வாகம் மூடி மறைத்திருந்த உண்மை ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகிறது என்றார். வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ கடந்த வாரம் பேசுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் இந்த தொற்றுநோய் அமெரிக்கா மீது ஏவப்பட்டதாக கூறினார்.

    உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறையின் சீனா குறித்த அறிக்கை, முதலில் ஜூன் மாதத்தில் கசிந்தது. C.I.A. மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள். சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் உலகிற்கு முக்கியமான தகவல்களை மறைத்தனர் என்ற ஒட்டுமொத்த கருத்தை இன்னமும் அதிகமாக ஆதரிக்கிறது, பெய்ஜிங்கில் உள்ள மூத்த அதிகாரிகள், மத்திய சீனாவில் உள்ள அதிகாரிகளிடமிருந்து தரவை பாதுகாத்தது போலவே , உலக சுகாதார அமைப்பின் தகவல்களைத் தடுத்து நிறுத்தி, தொற்று பரவியதற்கு முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

    English summary
    U.S. Agencies report that top officials in Beijing were in the dark in early January on the true dangers of the virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X