அஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி
வாஷிங்டன்: அஞ்சு பைடன் இந்தியாவுலா இருக்கிறதாகவும், ஒரு பைடன் இந்திய பெண்ணை திருமணம் செய்ததாக தேர்தல் சமயத்தில் என்னை பற்ற ஜோக்குகள் இந்தியாவில் பரவின என்று கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெகுவாக சிரித்தார்.
அப்போது உடனே கவுண்டர் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி, உங்களுக்காகவே இந்தியாவில் இருக்க பைடன்களை தேடுவதற்கு உதவுவதற்காகவே நான் ஆவணங்களோடு வந்திருக்கிறேன் என்று பதிலுக்கு ஜோக் அடித்தார்.
அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நான் 1972 ம் ஆண்டு 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்பதற்கு முன்பு, மும்பையில் பைடன் என்ற நபரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் அதை பின்பற்ற முடியவில்லை என்று சொன்னேன் ... அடுத்த நாள் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய பத்திரிக்கைகள் இந்தியாவில் ஐந்து பைடன்கள் இருப்பதாக கூறின, " என்று கூறினார்.

கேப்டன் ஜார்ஜ் பைடன்
இதை கேட்டு பிரதமர் நரேந்திர மோடி பலமாக சிரித்தார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் பேசும் போது, . கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக இருந்த கேப்டன் ஜார்ஜ் பைடன் (பிடன்) இருப்பதை நான் கண்டுபிடித்தேன் என்று நான் நகைச்சுவையாக சொன்னேன் ..." என்று கூறி சிரித்தார்.

கண்டுபிடிக்க முடியவில்லை
தொடர்ந்து கேலி செய்தபடி பேசிய ஜோ பைடன், "இறுதி முடிவு என்னவென்றால், அவர் (ஜார்ஜ் பைடன்) இந்தியாவில் தங்கியிருந்து ஒரு இந்தியப் பெண்ணை மணந்தார். ஆனால் என்னால் அவர்கள் எங்கு சென்றார்கள், என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை ..." என்று கிண்டலை பிரதமர் மோடியிடம் தொடர்ந்ததால் செய்தியாளர் சந்திப்பு முழுவதும் சிரிப்பு சத்தம் அடங்க நீண்ட நேரம் ஆனது.

பரம்பரை ஆவணங்கள்
நகைக்சுவை ஒரு பக்கம் இருக்க.. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும், நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்கும் என்று ஜோ பைடன் கூறினார். ஜோ பைடனின் பேச்சுக்கு பதில் அளித்த குறிப்பை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரின் பரம்பரை ஆவணங்களை கொண்டு வந்ததாக கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி கூறும் போது "நீங்கள் பைடன் (பிடன்) குடும்பப்பெயர்களைப் பற்றி பேசினீர்கள். நீங்கள் அதை என்னிடம் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். நான் ஆவணங்களை தேட முயன்றேன், நான் சில ஆவணங்களுடன் வந்திருக்கிறேன். ஒருவேளை அந்த ஆவணங்கள் ஏதேனும் பயன் தரக்கூடும்" என்று கூறினார். அதற்கு பைடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

நெருக்கமான நாடுகள்
செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (பிடன்) உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினார்கள். அமெரிக்க-இந்திய உறவு பல உலகளாவிய சவால்களை தீர்க்க உதவும் என்று நீண்ட காலமாக நம்புவதாக பைடன் கூறினார். பிரதமர் மோடி கூறும் போது " 2006 ஆம் ஆண்டில், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன். அது உண்மையாகி உள்ளது" என்றார்


Click it and Unblock the Notifications
