வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை.. அமெரிக்க அதிபர் தேர்தல் தள்ளிப்போகுமா? சட்டம் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காய்ச்சல் உள்ளிட்ட லேசான கொரோனா அறிகுறிகள் ட்ரம்புக்கு இருக்கிறது. ஒருபக்கம், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, சில வாரங்களே உள்ளது, குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளவர் டொனால்ட் டிரம்ப். ஆனால் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்தகைய சூழ்நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது அதிபர் தேர்தலை எவ்வாறு பாதிக்கும்? முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்:

ஐ லவ் யூ டாட்... நீங்கள் ஒரு வீரன்... கொரோனாவையும் வெல்வீர்கள் - இவாங்கா ட்ரம்ப் ட்வீட் ஐ லவ் யூ டாட்... நீங்கள் ஒரு வீரன்... கொரோனாவையும் வெல்வீர்கள் - இவாங்கா ட்ரம்ப் ட்வீட்

10 நாட்கள் தனிமை

10 நாட்கள் தனிமை

ட்ரம்ப் குறைந்தது பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். அதிபர் டிரம்ப் 10 நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமானால், அதிபர் வேட்பாளர்களிடையே அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது விவாதத்தில் ட்ரம்ப் பங்கேற்க முடியும். ஒருவேளை தனிமைப்படுத்துதல் காலம் நீடித்தால், விவாதத்தில் ட்ரம்ப் பங்கேற்க முடியாது.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

அதிபர் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தை கையாளும் குழு, 'அடுத்த பத்து நாட்களுக்கு தேர்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அல்லது அடுத்த தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளது. இந்த நிலையில்தான், தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா நோய் உடல்நிலை பாதிப்பு, நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவரின் செயல்திறன் குறைவாக இருப்பதை காரணமாகச் சொல்லி, தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இது எப்படி நடக்கும்?

அதிபர் தேர்தல் தேதி மாற்றமா?

அதிபர் தேர்தல் தேதி மாற்றமா?

2020ம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இருப்பது அவசியம். பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இதை ஒப்புக் கொள்ள வேண்டும், இது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது, ஏனெனில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் கீழ் சபையில் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் தேர்தல் தேதியை தள்ளி வைக்க சம்மதிக்க மாட்டார்கள்.

அதிபர் பதவி காலம்

அதிபர் பதவி காலம்

அமெரிக்க அரசியலமைப்பின் விதிகளின்படி, தேர்தல் தேதி மாற்றப்பட்டாலும், அமெரிக்க அதிபர் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள்தான். அதாவது 2021 ஜனவரி 20 ஆம் தேதி டிரம்பின் பதவிக்காலம் தானாகவே முடிவடையும். இந்த தேதியை மாற்றி, ட்ரம்ப் பதவியை நீட்டிக்க, அரசியலமைப்பில் ஒரு திருத்தமும் தேவைப்படும். இதற்கு மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க எம்பிக்கள் ஆதரவு அல்லது மூன்றில் இரண்டு பங்கு மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்பின்பு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாண அரசுகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே இதற்கும் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

உடல்நிலை மோசமானால் என்ன நடக்கும்?

உடல்நிலை மோசமானால் என்ன நடக்கும்?

ஒருவேளை தனது பணிகளை செய்ய முடியாத அளவுக்கு அதிபர் உடல்நிலை மோசமானால், துணை அதிபரிடம் அதிபர் தனது பொறுப்புகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு அமைப்பின் 25ஆவது சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதன்படி துணை அதிபர், பொறுப்பு அதிபராக செயல்பட முடியும். அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகிய இருவருமே அதிபர் பொறுப்பை கவனிக்கும் உடல்நிலையில் இல்லை என்றால் பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அந்த பொறுப்புக்கு வரலாம் என அமெரிக்காவின் 'ப்ரெசிடென்சியல் சக்சஷன்' சட்டம் வரையறுத்துள்ளது.

அதிபர் வேட்பாளரை மாற்ற முடியுமா?

அதிபர் வேட்பாளரை மாற்ற முடியுமா?

குடியரசு கட்சி டிரம்பை தங்கள் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ்தான், அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக முடியும் என்ற கட்டாயம் கிடையாது. குடியரசுக் கட்சியின் விதிகளின்படி, அக்கட்சியின் தேசிய கமிட்டியின் 168 உறுப்பினர்களும் கூடி புதிய அதிபர் வேட்பாளரை முடிவு செய்யலாம். ஆனால் அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் தேர்வு செய்யப்பட்டால், துணை அதிபர் வேட்பாளராக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இதுவரை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இப்படி அதிபர் வேட்பாளர் மாற்றப்பட்டது கிடையாது.

டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை

டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை

ஏற்கனவே பல லட்சம் பேருக்கு தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்டு விட்டன. சில மாநிலங்களில் நேரடி வாக்குப்பதிவு தொடங்கி விட்டது. எனவே, வாக்குச் சீட்டில் அதிபர் பதவிக்கு வரத் தகுதியில்லாத வேட்பாளரின் பெயருடனேயே வாக்கு பதிவு தொடர்ந்து நடைபெறும். இதில் மாற்றம் ஏற்படுத்துவது ரொம்ப கஷ்டம். எனவே ட்ரம்ப் நல்ல உடல்நிலையுடன் திரும்பினால் எந்த குழப்பமும் இன்றி தேர்தல் நடக்கும். அதுதான் அனைவரின் விருப்பமும்.

English summary
What will happen if Donald Trump can't get well soon from corona virus? will it impact US presidential election 2020?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X