வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க தேர்தல் ரேஸில் முந்தப்போவது குடியரசுக்கட்சியின் யானையா? ஜனநாயகக் கட்சியின் கழுதையா?

அமெரிக்காவில் குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயகக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டு வருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயகக் கட்சி ஏன் கழுதைச்சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இந்த அதிபர் தேர்தல் ரேஸில் முந்தப்போவது யானையா? கழுதையா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபராக தற்போது குடியரசுக்கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து ஜனநாயக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் ஜோடி பிடன். ஏற்கனவே பத்து கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ள நிலையில் இன்றும் பலகோடி பேர் வாக்களித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் பதவி, துணை அதிபர் பதவி, செனட் உறுப்பினர்கள், பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நம் ஊர் போல நிறைய சின்னங்களோ கட்சிகளோ அங்கு இல்லை இரண்டே கட்சிதான், இரண்டு சின்னங்கள், இரண்டு நிறங்கள்தான்.

அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி.. டிரம்ப் கோபம்அதிபர் தேர்தல்: பென்சில்வேனியாவில் 3 நாட்களுக்கு இ மெயில் ஓட்டு போட கோர்ட் அனுமதி.. டிரம்ப் கோபம்

அமெரிக்க தேர்தல் சின்னங்கள்

அமெரிக்க தேர்தல் சின்னங்கள்

போடுங்கம்மா ஓட்டு யானை சின்னத்தை பார்த்து... போடுங்கம்மா ஓட்டு கழுதைச் சின்னத்தை பார்த்து என்றெல்லாம் நம் ஊர் போல சின்னத்தை பதாகைகளில் வரைந்து வீதி வீதியாக எடுத்துக்கொண்டு ஓட்டுக்கேட்ட மாட்டார்கள். அங்கே ஓட்டு கேட்கும் ஸ்டைலே தனிதான் இருந்தாலும் யானையும் சின்னமும் கழுதை சின்னமும் அமெரிக்க தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டிரம்பின் யானை, ஜோ பிடனின் கழுதை

டிரம்பின் யானை, ஜோ பிடனின் கழுதை

குடியரசு கட்சியின் தேர்தல் சின்னம் யானை, இந்த சின்னத்தில் வலதுசாரி தத்துவங்களை முன்னெடுக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னம் கழுதை மிதவாத கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்கள்.

சின்னம் வந்தது எப்படி

சின்னம் வந்தது எப்படி

1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி மற்றும் அது பெற்ற வாங்குவங்கியை ஒப்பிட்டு யானை ஒன்றை வரைந்து வெளியிட்டார். அமெரிக்காவின் அரசியல் வார இதழான ஹர்பெர் இதழிலில் வெளியான அந்த கார்ட்டூன் குடியரசு கட்சியின் சின்னமாகிப்போனது.

யானையை பிடித்த குடியரசுக்கட்சி

யானையை பிடித்த குடியரசுக்கட்சி

யானை சின்னத்தை பலரும் கிண்டல் அடித்தார்கள். சிலர் காட்டில் வாழும் விலங்குகள் குடியரசுக்கு வாக்களிப்பார்கள் என நக்கலாக பேசினார்கள். ஆனாலும், யானை சின்னத்தை குடியரசுக்கட்சி விடவில்லை.

கழுதையை விடாத ஜனநாயகக் கட்சி

கழுதையை விடாத ஜனநாயகக் கட்சி

ஜனநாயக கட்சியின் கழுதை சின்னம் அமைந்த விதமும் சுவாரஸ்யமானது. 1828 ஆம் ஆண்டு கழுதை சின்னத்தை அறிமுகப்படுத்திய ஜனநாயக கட்சியின் ஆட்ரூ ஜேக்சனை பலரும் ஜேக்கஸ் என விமர்சித்தார்கள். ஏனென்றால் மக்கள் நாட்டை ஆளட்டும் என்று அவர் சொன்னதை ஏளனமாக பார்த்தார்கள். ஆனாலும் அவர் தளரவில்லை. தொடர்ந்து கழுதை சின்னத்தையே தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திவந்தார். பிறகு தொடர்ந்து கழுதையே ஜனநாயக கட்சியின் சின்னமானது.

நீல நிறம் ஆளுமா?

நீல நிறம் ஆளுமா?

குடியரசுக்கட்சியின் நிறம் சிவப்பு, ஜனநாயகக் கட்சியின் நிறம் நீலம். பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே பேசிய டிரம்ப். தேர்தலில் வெற்றி உறுதி என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, தங்களது கட்சியின் நிறத்தை குறிக்கும் வகையில் அமெரிக்காவில் விரைவில் சிவப்பு அலை அடிக்கும் என கூறியுள்ளார். ஜோ பிடனும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். அமெரிக்காவை ஆளப்போவது நீல நிற கழுதையா? சிவப்பு நிற யானையா என்பதை அமெரிக்க மக்கள் தீர்ப்பளித்து விடுவார்கள்.

English summary
At a time when the election for president and vice president is in full swing in the United States, we can see why the Republicans are competing on the elephant symbol and the Democratic on the donkey symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X