வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'எவ்வளவு பெரிய மாத்திரை..' பெயின் கில்லர் மாத்திரை என நினைத்து.. ஆப்பிள் ஏர்பாட்டை விழுங்கிய பெண்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது டிக்டாக் பிரபலம் பெயின் கில்லர் மாத்திரை என நினைத்து ஆப்பிள் ஏர்பாடை உட்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் ஆப்பிள் ஏர்பாடை மாத்திரை என்று தவறாக நினைத்துக் கொண்டு உட்கொண்டுள்ளார்.

தெளிய விட்டு தெளிய விட்டு தாக்கும் மழை...காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு அதிகனமழைதெளிய விட்டு தெளிய விட்டு தாக்கும் மழை...காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு அதிகனமழை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது. அதேநேரம் சிலர் அப்பெண்ணையும் சாடி வருகின்றனர்,

 டிக்டாக் பிரபலம்

டிக்டாக் பிரபலம்

அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் மாகாணத்தின் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கார்லி பெல்மர். 27 வயதாகும் கார்லி பெல்மர் டிக்டாக் பிரபலம் ஆவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மருந்து என நினைத்துத் தான் தவறுதலாக ஆப்பிள் ஏர்பாடை உட்கொண்டதாகவும் இதை எக்ஸ்ரே சோதனையிலும் மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.

 மருந்து என நினைத்து

மருந்து என நினைத்து

அவர் வெளியிட்ட அந்த டிக்டாக் வீடியோவில், "நான் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன். எனது ஒரு கையில் பெயின் கில்லர் மருந்தும், இன்னொரு கையில் ஆப்பிள் ஏர்பாடும் இருந்தது. எதோ ஒரு நினைப்பில் மருந்திற்குப் பதிலாக ஆப்பிள் ஏர்பாடை உட்கொண்டுவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பின்னரே நான் சாப்பிட்டது பெயின் கில்லர் இல்லை ஏர்பாட் என்பதை உணர்ந்தேன். இதையடுத்து வாந்தி எடுக்கக் கூட நான் முயன்றேன். இருப்பினும், என்னால் ஏர்பாடை மீண்டும் வெளியே எடுக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

 வைரலான வீடியோ

வைரலான வீடியோ

அந்த பெண்ணுக்கு டிக்டாக்கில் 3,200 பஃலோயர்ஸ் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஒற்றை வீடியோவை மட்டும் சுமார் 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆப்பிள் ஏர்பாடை மருந்து எனத் தவறாக விழுங்கிய முதல் நபர் தான் இல்லை என்றும் கடைசி நபராகவும் தான் இருக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வீடியோவை பகிர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இணையத்தில் மோதல்

இணையத்தில் மோதல்

இருப்பினும், இது குறித்து பலரும் இணையத்தில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர். மாத்திரைகளை விட ஆப்பிள் ஏர்பாட் பெரியதாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது, இந்த பெண் கூறுவதை நம்ப முடியவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அந்தப் பெண் குறிப்பிடும் அந்த மருந்து ஒப்பீட்டளவில் பெரிதாகவே இருக்கும் என்றும் அவருக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 காதலனுக்கு ஆடியோ

காதலனுக்கு ஆடியோ

இந்த வீடியோ வைரலான பிறகு, மேலும் சில பதிவுகளையும் அவர் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வயிற்றுக்குள் போன பிறகும் கூட ஏர்பாட் தனது ஸ்மார்ட்போனுடன் இணைப்பில் இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், வயிற்றில் இருக்கும்போதே தனது காதலனுக்கு ஆடியோ ஒன்றும் தவறுதலாக ஏர்பாட் மூலம் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். உடனடி.யாக மருத்துவரிடம் சென்ற போது, எக்ஸரே சோதனையிலும் கூட ஏர்பாட் உள்ளே இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 மற்றொரு வீடியோ

மற்றொரு வீடியோ

மேலும், மற்றொரு வீடியோவிஸ் அந்த பெண், "சில மணி நேரம் கழித்து மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்தோம். அப்போது வயிற்றில் ஏர்பாட் இல்லை. இதைத் தான் மருத்துவர்களும் சொன்னார்கள். இப்போது தான் எனக்குச் சற்று நிம்மதியாக உள்ளது. இருந்தாலும் கூட ஒவ்வொரு முறையும் மாத்திரையைக் கையில் எடுக்கும்போது சற்று அச்சம் இருக்கத்தான் செய்கிறது" என்று தெரிவித்தார்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

ஏர்பாட்களை ஒருவர் தவறுதலாக விழுங்குவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒருவர், தூக்கத்தில் தனது ஏர்பாட்டை விழுங்கிவிட்டதாகவும், இதனால் மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறினார். இதையடுத்து எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்த டாக்டர்கள், நீண்ட, குழாயைப் பயன்படுத்தி அவரது உணவுக்குழாயில் இருந்து ஏர்பாட்டை அகற்றினர்,

English summary
27-year-old TikToker has shot to fame after she revealed in a series of posts that she swallowed her Apple AirPod. latest US news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X