வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருவரின் அலட்சியம்.. அப்படியே முடங்கிய அமெரிக்கா.. விமானங்கள் தரையிறங்க காரணமே வேறயாம்! பரபர விசாரணை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு ஒட்டுமொத்த விமானச் சேவையும் முடங்கிப் போனது. இதனிடையே இதற்கான காரணம் என்ன என்பதை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு இது போதாத காலம் போல... அடுத்தடுத்து அமெரிக்காவுக்கு பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்கிறது.. முதலில் அங்குக் கிறிஸ்துமஸ் காலத்தில் ஜீரோ டிகிரிக்கு கீழ் வெப்பம் சென்று நாடே உறைந்து போனது.

அடுத்து கலிபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் வெப்ப நிலை ரொம்பவே ஆபத்தான நிலைக்குச் சென்றது. இப்படி இயற்கை பாதிப்புகள் அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து தலைவலியைக் கொடுத்தது.

உலகின் மிக பெரிய சைபர் தாக்குதல்? முடங்கிய அமெரிக்கா! தரையிறக்கப்பட்ட விமானங்கள்.. பரபர விளக்கம்உலகின் மிக பெரிய சைபர் தாக்குதல்? முடங்கிய அமெரிக்கா! தரையிறக்கப்பட்ட விமானங்கள்.. பரபர விளக்கம்

அமெரிக்கா

அமெரிக்கா

இது ஒரு பக்கம் இருக்க சில நாட்களுக்கு முன்பு அங்கு விமானங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட இந்த சிக்கல் காரணமாக அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. ஏதாவது விமானம் கடத்தப்பட்டால் அல்லது மோசமான நிகழ்வுகள் ஏற்பட்டால் தான் இதுபோல அனைத்து விமானங்களும் தரையிறக்கப்படும். இதனால் அங்குள்ள மக்கள் முதலில் அச்சமடைந்தனர். அதன் பின்னரே தொழினுட்ப சிக்கல் காரணமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

முடங்கிய விமானங்கள்

முடங்கிய விமானங்கள்

இந்த தொழில்நுட்ப கோளாற்றால் விமானங்களால் தரையிறங்க மட்டுமே முடிந்தது.. கிளம்ப அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அங்குப் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல ஆயிரம் விமானங்கள் தாமதமாகின. அமெரிக்காவில் விமான பயணிகள் எண்ணிக்கை ரொம்வே அதிகம். அது அப்படியே முடங்கிப் போனதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சைபர் தாக்குதல் காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக முதலில் தகவல் வெளியான. மேலும், இது உலகின் மிகப் பெரிய சைபர் தாக்குதல் என்றும் அவர்கள் கூறினர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதை அமெரிக்க மறுத்திருந்த நிலையில், இந்த பிரச்சினைக்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. கம்ப்யூட்டர் செயலிழந்ததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதே டேட்டா டேமேஜாக காரணமாக இருந்ததாகவும் அதுவே விமானங்கள் ரத்தாகக் காரணமாக அமைந்ததாக அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

யார் காரணம்

யார் காரணம்

இந்த விஷயத்திற்குக் காரணம் யார் என்று காரணம் என்பது தெரிந்துவிட்டாலும் அவரது பெயரை அமெரிக்கா வெளியிடவில்லை.. அவரது அலட்சியத்தால் டேட்டா டேமேஜ் ஆனதால்.. விமானிகளுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை தானாகச் சென்றுவிட்டது.. இதனால் பாதுகாப்பு கருத்தில் கொண்டு அனைத்து விமானங்களையும் உடனடியாக தரையிறக்க அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் உத்தரவிட்டது. இதுபோன்ற பெரிய நெட்வோர்க்குகளில் எதிர்பாராத சமயங்களில் உதவ பேக்அப் வைக்கப்படும். ஆனால், இந்த சம்பவத்தில் மெயின் சர்வர் மட்டுமில்லாமல் பேக்அப் சர்வரிலும் பிரச்சினை ஏற்பட்டது.

விதிகளை பின்பற்றவில்லை

விதிகளை பின்பற்றவில்லை

இந்த காலத்தில் விமானங்கள் இயக்க கம்யூட்டர்களும் டேட்டாக்களும் ரொம்பவே முக்கியம்.. இதனால் டேட்டாக்களை பாதுகாக்க அங்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் பல விதிமுறைகளையும் விதித்து உள்ளது. இருப்பினும், அந்த விதிகளைப் பின்பற்றாமல் அவர்கள் கோடிங்கை மாற்றியதே இந்த பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிட்டது. விமானங்களுக்குத் தேவைப்படும் டேட்டா கோடிங்கில் இரண்டு ஊழியர்கள் பிழைகளை ஏற்படுத்தியதாகவும் அதுவே இதற்குக் காரணம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை

விசாரணை

அவர்கள் இரண்டு பேரும் தற்செயலாக இதைச் செய்தார்களா அல்லது வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பிரச்சினை முதலில் ஏற்படத் தொடங்கியுள்ளது.. அவர்களுக்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை என்பதால் அவர்கள் பேக்அப் சர்வருக்கு மாறியுள்ளனர்.. ஆனால், பேக்அப் சர்வரும் அதே டேமேஜான டேட்டாவை எடுத்துள்ளது. இதனால் பேக்அப் சர்வரும் வேலை செய்யவில்லை. இதனால் வெறு வழியில்லாமல் ஸ்டத்தை முழுமையாக நிறுத்தினர். இதனால் புதன்கிழமை காலை சுமார் 90 நிமிடங்கள் அமெரிக்காவில் விமான சேவை முற்றிலுமாக முடங்கியது.

கூடுதல் நடவடிக்கை

கூடுதல் நடவடிக்கை

இதையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிலைமையை மீண்டும் சீராக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது விமானங்கள் சீராக இயங்கி வருவதாகவும் கேன்சல் செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்ற பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் இருக்கக் கூடுதலாக சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
US finds the person who is reason for mega commuter failure that causes flights grounded: US rules out cyber attack on flights grounded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X