வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை போலவே மங்கி பாக்ஸ்? அப்போ இது தான் அடுத்த பெருந்தொற்றா! சில நாட்களில் WHO முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவ தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனாவை பெந்தொற்றாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு.

வேக்சின் பணிகள், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் எனப் பல கட்ட நடவடிக்கைக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது.

கொரோனா மட்டுமில்லை.. மங்கி பாக்ஸும் உருமாறுகிறது! அமெரிக்க ஆய்வாளர்கள் பகீர்.. ஆபத்தா? பரபர தகவல்கொரோனா மட்டுமில்லை.. மங்கி பாக்ஸும் உருமாறுகிறது! அமெரிக்க ஆய்வாளர்கள் பகீர்.. ஆபத்தா? பரபர தகவல்

 மங்கி பாக்ஸ்

மங்கி பாக்ஸ்

இதனிடையே அடுத்த தலைவலியாக உலகின் பல பகுதிகளில் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ளது. பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே மங்கி பாக்ஸ் பாதிப்பு இருக்கும். அங்கு அது எண்டமிக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளுக்கும் பரவ தொடங்கி உள்ளது.

 ஐரோப்பா

ஐரோப்பா

இப்போது வரை உலகெங்கும் 3,300க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 42 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள பாதிப்புகளில் 80% ஐரோப்பாவில் மட்டுமே பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1400 பேருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

 ஆப்பிரிக்காவைத் தாண்டி

ஆப்பிரிக்காவைத் தாண்டி

பொதுவாக இந்த வைரஸ் ஆப்பிரிக்காவைத் தாண்டாது. ஆனால், இந்த முறை அது ஆப்பிரிக்காவைத் தாண்டி பல இடங்களுக்கும் பரவி உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்தே உலகம் இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், எங்கு இந்த மங்கி பாக்ஸ் அடுத்த பெந்தொற்றை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

 அவசர நிலை

அவசர நிலை

இந்தச் சூழலில் வரும் வியாழக்கிழமை உலக சுகாதார அமைப்பு அதன் அவசரக் குழுவைக் கூட்ட உள்ளது. மேற்குலகில் பல நாடுகளில் இந்த மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், இதைச் சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது குறித்து வல்லுநர்கள் பரிசிலினை செய்ய உள்ளனர். இதை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தால், இது அசாதாரண நிகழ்வாகக் கருதப்படும்.

Recommended Video

    Monkey Pox.. தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை!
     கொரோனா போல

    கொரோனா போல

    முன்னதாக கொரோனா பரவ தொடங்கிய போதும், அதை பெருந்தொற்றாக அறிவிப்பதற்கு முன்னர் சர்வதேச அவசர நிலையாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் எடுக்கப்பட்டதை போல சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். முன்னதாக கொரோனா வைரஸ், போலியோ ஆகியவற்றை ஒழிக்க இந்த நடைமுறையையே பின்பற்றியது.

     மங்கி பாக்ஸ்

    மங்கி பாக்ஸ்

    குரங்கு அம்மை பல நாடுகளுக்குப் பரவ தொடங்கி உள்ள நிலையில், அதை அவசர நிலையாக அறிவிப்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவசர நிலையாக அறிவித்தால், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    World Health Organization convenes its emergency committee to consider to announce monkeypox as global emergency: (உலகெங்கும் பரவும் மங்கி பாக்ஸ்) World Health Organization about spread of Monkeypox in world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X