வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் சாகப்போறேன.. என்னை பத்தி கவலைப்படாதீங்க.." கடைசி நொடியில் நாசாவுக்கு வந்த மெசேஞ்! என்னாச்சு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, "நான் சாகப் போறேன.. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க.." என்று ஒரு மெசேஞ் வந்தது. இதைப் பார்த்தவுடன் நாசா ஆய்வாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஏன்! என்னாச்சு! வாங்க பார்க்கலாம்.

அமெரிக்காவின் நாசா தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். உலகின் பிற விண்வெளி மையங்கள் இப்போது தான் நிலா குறித்த ஆய்வுகளையே தீவிரப்படுத்தியுள்ளன.

ஆனால், நாசா என்றைக்கோ நிலவில் ஆய்வுகளைச் செய்துவிட்டது. இப்போது நாசா செவ்வாய்க் கிரகம், சூரியன் குறித்தெல்லாம் ஆய்வுகளை நடத்தத் தொடங்கிவிட்டது. அதில் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் பெறத் தொடங்கிவிட்டது.

 சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா சொல்லி அடிக்கும் நாசா... பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்! எங்கே விழும்? ஏன் முக்கியம் தெரியுமா

நாசா

நாசா

அப்படித்தான் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நாசா இன்சைட் என்ற ஒரு சாட்டிலைட்டை அனுப்பியது. இது செவ்வாய்க் கிரகம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் ஆகும். இது சுமார் ஏழு மாதங்கள் இடைவிடாமல் பயணித்துக் கடந்த 2018 நவ. மாதம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்த சாட்டிலைட் 48.3 கோடி கிலோ மீட்டர் பயணித்துள்ளது. அங்கிருந்தபடியே செவ்வாய்க் கிரகத்தில் இருந்து இந்த இன்சைட் உலா வந்தது.

இன்சைட்

இன்சைட்

அங்குப் பல பகுதிகளைப் போட்டோ எடுத்து அமெரிக்காவில் உள்ள நாசா தலைமையகத்திற்கு இன்சைட் அனுப்பி வந்தது. இப்படியே சுமார் 4 ஆண்டுகளாக இன்சைட் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இன்சைட்டில் இருந்து நாசாவுக்கு மெசேஞ் ஒன்று வந்துள்ளது. அதைப் படித்த உடன் நாசா ஆய்வாளர்கள் ரொம்பவே சோகமாகிவிட்டனர். அப்படி என்ன தான் இன்சைட் அனுப்பியிருந்தது எனக் கேட்கிறீர்களா! வாருங்கள் பார்க்கலாம்.

 சாகப் போகிறேன்

சாகப் போகிறேன்

நாசாவுக்கு இன்சைட் அனுப்பிய அந்த கடைசி மெசேஞ்சில், "எனக்கு பவரும் ரொம்பவே குறைவாக இருக்கிறது... இதனால் நான் அனுப்பக்கூடிய கடைசிப் படமாக இது இருக்கலாம். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்: இங்கு எனது நேரம் பயனுள்ளதாகவும் அமைதியாகவும் இருந்தது. எனது குழுவுடன் தொடர்ந்து என்னால் பேச முடிந்தால், நான் செய்வேன்.. ஆனால், இங்கு எனக்கான நேரம் சீக்கிரமே முடிந்துவிடும். என்னுடன் தொடர்பில் இருப்பதற்கு நன்றி" என்று கடைசி மெசேஞ்சை அனுப்பியுள்ளது இன்சைட். அதன் பிறகு நாசா ஆய்வாளர்கள் இன்சைட்டை எவ்வளவோ தொடர்பு கொள்ள முயன்றும் அது முடியாமல் போய்விட்டது.

 ஆஃப் ஆனது ஏன்

ஆஃப் ஆனது ஏன்

கடைசி மெசேஞ் உடன் படம் ஒன்றையும் அது நாசாவுக்கு அனுப்பியுள்ளது. அதையும் நாசா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில், இன்சைட் லேண்டர் செவ்வாய்க் கிரகத்தின் தூசியால் மூடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இன்சைட் லேண்டர் சூரியனில் இருந்து வரும் சோலார் சக்தியில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் திறன் கொண்டது. இருப்பினும், தூசியால் அதன் சோலார் பேனல்களை முழுவதுமாக மூடியதால் அதால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. இதுவே அதன் பவர் முற்றிலுமாக காலியாக காரணமாக அமைந்துவிட்டது. முதலில் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த இன்சைட் லேண்டர் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டது.

 மொத்தம் 4 ஆண்டுகள்

மொத்தம் 4 ஆண்டுகள்

இருப்பினும், அதையும் தாண்டி 4 ஆண்டுகளுக்கு இந்த லேண்டர் தொடர்ந்து செயல்பட்டுள்ளது. இதை நாசா ஒரு மிக பெரிய வெற்றியாகவே பார்க்கிறது. இந்த காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கங்களை இந்த லேண்டர் பதிவு செய்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் அதன் அடியில் உள்ள அடுக்குகள் உருவாவதை ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள இது உதவியுள்ளது. செவ்வாய்க் கிரகம் மேலோடு, மேன்டில் மற்றும் கோர் என்று 3 லேயர்களால் ஆகியுள்ளதை நாசாவால் உறுதி செய்ய முடிந்துள்ளது.

 ரொம்ப சந்தோஷம்

ரொம்ப சந்தோஷம்

இப்படிப் பல முக்கிய விஷயங்களை அங்கிருந்தபடியே இந்த லேண்டர் அனுப்பியுள்ளது. முன்னதாக இந்த லேண்டர் கடந்த நவ. மாதம் மெசேஞ் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், "இரண்டு கிரகங்களில் வாழும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பாதுகாப்பாக இரண்டாவது கிரகத்திற்கு வந்தேன்.. இந்த பயணத்திற்கு என்னை அனுப்பிய எனது குழுவிற்கு நன்றி. நான் உங்களுக்குப் பெருமை சேர்ப்பேன்" என்று மேசேஞை அனுப்பியது.

 சில நாட்கள்

சில நாட்கள்

இந்த மெசேஜை அனுப்பி ஒரு மாதத்தில் இப்போது பவர் அவுட் ஆகியுள்ளது. இப்போது அதில் இருக்கும் சிறிய பவரை கொண்டு அந்த லேண்டரை எவ்வளவு காலம் இயக்க முடியுமோ அவ்வளவு காலம் இயக்க நாசா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பவர் மிக விரைவாகக் குறைந்து வருவதால், நில அதிர்வுமானியை இயங்க வைக்க அதன் இதர அறிவியல் கருவிகளையும் அணைத்து வைத்துவிட்டது. இருப்பினும், இன்னும் சில நாட்களில் இந்த லேண்டர் முழுவதுமாக ஓய்வு பெற்றுவிடும் என்றே கூறப்படுகிறது.

English summary
Nasa's InSight lander send its last message from mars says it's power is going to off: Nasa's InSight lander went off in mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X